பால் விளம்பரத்தில் நடித்த மகாராணியாரின் பேரனுக்கு போட்டியாக இளவரசி டயானாவின் மருமகள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய மகாராணியாரின் பேரன் பால் விளம்பரத்தில் நடித்தது சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், இளவரசி டயானாவின் உறவினரான ஒரு பெண், மகாராணியாரின் பேரனுக்குப் போட்டியாக மற்றொரு பால் விளம்பரத்தில் நடிக்கிறார்.

மகாராணியாரின் மகளான ஆன் உடைய மகனான பீற்றர் என்பவர் சீன தொலைக்காட்சி ஒன்றிற்காக பால் விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார்.

இந்த செய்தி வெளியானதையடுத்து, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், பீற்றர் ராஜ குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அவரை இப்படியொரு விளம்பரத்தில் நடிக்க அனுமதித்தது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இது இப்படியிருக்க, இன்னொரு பக்கம் இளவரசி டயானாவின் உறவினரான் ஒரு பெண் பீற்றருக்கு போட்டியாக, மற்றொரு பால் விளம்பரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Lady Kitty Spencer என்னும் அந்த பெண்ணுக்கு இளவரசி டயானா அத்தை முறையாவார்.

இளவரசர் வில்லியம் மற்றும் ஹரிக்கு அவர் மாமன் மகளாவார். Kitty பால் விளம்பரத்தில் நடித்துள்ளதற்கு என்ன பிரச்சினை வரப்போகிறதோ தெரியவில்லை!

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers