லண்டன் பெண் கண்ணீர்...தேனிலவால் வந்த வினை! மருமகனை திருமணம் செய்த மாமியார்

Report Print Santhan in பிரித்தானியா

தேனிலவிற்கு கணவருடன் சேர்ந்து தன்னுடைய அம்மாவையும் மகள் அழைத்து சென்றதால், தற்போது அதனால் அவர் தற்போது துரோகத்தை நினைத்து தினந்தோறும் வேதனைப்படுவதாக கூறியுள்ளார்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனை சேர்ந்தவர் லாரன் வால், 34 வயது பெண்ணான இவருக்கு 19 வயதாக இருந்தபோது, பால் ஒயிட் என்ற இளைஞருடன் திருமணம் நடந்துள்ளது. பால், விமானநிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.

லாரனுக்கு தந்தை இல்லாததால், அவரின் திருமணத்தை தாய் ஜூலி வெகு விமர்ச்சியாக நடத்தியுள்ளார். அதாவது லாரன் வால் திருமணத்திற்கு மட்டும் சுமார் 15,000 பவுண்ட் செலவு செய்துள்ளார்.

திருமணத்திற்கு பின் லாரன் மற்றும் அவரது கணவர் தேனிலவிற்கு செல்ல முடிவு செய்துள்ளனர். அதன் படி இருவரும் தேவோன் பகுதிக்கு செல்லலாம் என்று முடிவு செய்ய, தன் தாய் மட்டுமே வீட்டில் இருப்பார் என்று அவரையும் அழைத்துள்ளார்.

முதலில் மறுத்த அவரின் தாய், அதன் பின் சரி என்று அவர்களுடன் சென்றுள்ளார். தேனிலவு சென்ற இடத்தில், தன்னுடைய அம்மாவும், கணவரும் பேசிக் கொள்வதை பார்த்த லாரன், இந்தளவிற்கு இருவரும் நண்பர்கள் போன்று இருக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டதுடன், மகிழ்ச்சியடைந்துள்ளார்.

லாரனின் சகோதரி தன்னுடைய தாயின் மொபைல் போனை எடுத்து பார்த்த போது, அதில் பாலுடன், ஜுலி ஆபசமாக பேசிய உரையாடல்களைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனால் உடனடியாக அவர் லாரனினிடம் இது குறித்து கூற, உடனடியாக லாரன் கணவரிடம் கேட்டுள்ளார். ஆனால் பால் இதற்கு எந்த ஒரு சரியான பதிலும் கொடுக்காமல் மோதிரத்தை கழற்றி எறிந்துவிட்டு, மாமியரான ஜுலியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அதன் பின் 9 மாதங்களில் ஜுலு குழந்தை பெற்றெடுக்க, இரண்டு பேருமே தனக்கு துரோகம் செய்துவிட்டதாக 5 வருடங்கள் கழித்து இப்போது லாரன் ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

அப்போது என் அம்மா, எனக்கு போன் செய்து எனக்கு கல்யாணம் வந்து விடு என்று கூறுகிறார், எனக்கும், பாலுக்கும் 2004-ஆம் ஆண்டு திருமணமானது, குழந்தை இருக்கிறது. ஆனால் 2009-ஆம் ஆண்டு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

எனது மகளின் எதிர்காலத்திற்காக, நானும் அந்த திருமணத்திற்கு சென்று கலந்து கொண்டேன்.

நான் தப்பு செய்துவிட்டேன், என்னை மன்னித்துவிடு என்று எனது தாய் என்னிடம் பல முறை கூறினார். நான் ஏற்கவில்லை. ஆனால் பால் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை, இப்போது தனது வாழ்க்கைத் துணையாக வேறு ஒருவரை நாடியுள்ளேன், இப்போது கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறது என்று லாரன் கூறியுள்ளார்.

இருப்பினும் இந்த துரோகத்தை என்னால் மறக்க முடியவில்லை என்று வேதனையுடன் கூறி முடித்துள்ளார். பாலுக்கு தற்போது வயது 35 வயது, அவரின் முன்னாள் மாமியரும், தற்போதைய மனைவியுமான ஜுலிக்கு 53 வயது என்பது நினைவுகூரத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்