இளவரசர் ஹரிக்கு எதிர்பாராத சிக்கல்: பணம் பார்ப்பதற்கு அவுஸ்திரேலியாவிலிருந்து வந்த எதிர்ப்பு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

சொந்தக்காலில் நிற்பதற்காக ராஜ குடும்பத்தைவிட்டே வெளியேறின பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு, பணம் சம்பாதிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இளவரசர் ஹரியும் மேகனும் சில வகை உடைகள் மற்றும் போஸ்ட் கார்டுகளை உருவாக்கி தங்கள் பெயரில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதற்காக தங்கள் தயாரிப்புகளுக்கென்று ஒரு பிராண்டை உருவாக்கி, அதற்கான டிரேட் மார்க் பெறுவதற்கான முயற்சியில் அவர்கள் இறங்கினர்.

ஆனால், அதற்குள் அவுஸ்திரேலியர் ஒருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனவே, ஹரி மேகன் தம்பதி நீதிமன்றம் செல்ல வேண்டி வரலாம், வருவாய் வரும் முன்பே வழக்கு செலவுகளை சந்திக்கவேண்டி வரலாம்.

Credit: Getty Images - Getty

பொதுவாகவே ஒருவர் ஒரு டிரேட்மார்க்கை பதிவுசெய்யும்போது அதை யாராவது எதிர்க்கிறார்களா என்பதை பார்ப்பதற்காக கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கப்படும்.

அந்த டிரேட்மார்க் தங்களுடையதைப் போலவே உள்ளது என்பது போன்ற ஏதாவது காரணத்தைக் காட்டி எதிராளிகள் வழக்கு தொடர்லாம்.

தற்போது, ஹரி மேகன் தம்பதியர் டிரேட்மார்க்கை பதிவு செய்வதற்கு அவுஸ்திரேலியர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த Benjamin Worcester என்பவர்தான் அந்த எதிர்ப்பை தெரிவித்துள்ளவர்.

அவர் பிரித்தானியாவில், லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் மருத்துவம் பயின்றதாகவும், அரசு மருத்துவமனையில் 2011 முதல் 2014 வரை மருத்துவராக பணியாற்றியதாகவும் கருதப்படுகிறது.

பிரித்தானியாவில் கல்வி கற்ற ஒருவரே ஏன் பிரித்தானிய இளவரசருக்கு எதிராக களமிறங்கியுள்ளார் என்பது தெரியவில்லை.

எப்படியும், இளவரசர் ஹரி பண சம்பாதிப்பதற்காக எடுத்து வைத்த முதல் அடியிலேயே சறுக்கல் வந்துள்ளதால் அவர் எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்