கையெழுத்தானது பிரெக்சிட் ஒப்பந்தம்: செயல் திட்டத்தில் கையெழுத்திட்டார் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பயணத்தில் பெரிய அடி ஒன்றை முன்னோக்கி எடுத்துவைத்துள்ளது.

ஆம்! ஐரோப்பிய ஒன்றிய தலைவரான Ursula von der Leyen முறைப்படி பிரெக்சிட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

ஐரோப்பிய கமிஷனின் தலைவரான Ursula, பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பிரெக்சிட் ஒப்பந்தத்தில், இன்று காலை பிரஸ்ஸல்சில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின்போது கையெழுத்திட்டார்.

அவருடன் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவரான Charles Michelம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

அதன் பிறகு Ursula வெளியிட்ட ட்வீட் ஒன்றில், Charles Michelம் நானும், இப்போதுதான் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் முறைப்படி ஒப்புதல் பெறுவதற்கான வழியை ஏற்படுத்திக்கொடுத்தோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இன்றே பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனும், பிரதமர் இல்லத்தில், அந்த ஒப்பந்தத்தின் பிரித்தானியாவுக்கான நகலில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்ட நடவடிக்கையாக, அடுத்த புதன் கிழமை, இந்த ஒப்பந்தத்தின் மீது ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இறுதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

ஆனால், அது ஒரு பரம்பரியப்படியான கண் துடைப்பு வாக்கெடுப்புதான். எனவே, இப்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இம்மாதம் இறுதி நாள் இரவு 11 மணிக்கு பிரித்தானியா வெளியேறுவது உறுதியாகிவிட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்