பிரெக்சிட் இன்னும் நிறைவேறவில்லை: அதற்குள் துவங்கியது பிரச்சனை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இன்னமும் பிரெக்சிட் நிறைவேறவில்லை, ஆனால், அதற்குள் பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரச்சனைகள் தொடங்கிவிட்டாற்போலிருக்கிறது.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பின்னர், பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் ஒப்பந்தங்கள் ஏதாவது செய்யப்படும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிபதிகள்தான் அதை முடிவு செய்யவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

வெளியாகியுள்ள ஒரு ஆவணத்திலிருந்து, பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் ஒப்பந்தங்கள் ஏதாவது செய்யப்படும் நிலையில், அந்த வர்த்தகம், மீன் பிடித்தல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களுக்கான விதிமுறைகளை ஐரோப்பிய நீதித்துறை நீதிமன்றம் (European Court of Justice (ECJ)தான் முடிவு செய்யவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் விரும்புவதாகத் தெரிகிறது.

இதற்கு முன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின்போது, நாடுகளுக்கு செய்யப்படும் உதவி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆனால், இப்போது அதையும் தாண்டி, பிரித்தானியா ஒப்புக்கொள்ளும் விதிகள் எதையாவது மீறியுள்ளதா என்பதை முடிவு செய்வதிலும் ஐரோப்பிய நீதித்துறை நீதிமன்றத்தின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

இந்த விடயம், பிரெக்சிட்டுக்கு முன்னரே பிரெக்சிட் ஆதரவு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை கோபப்படுத்தியுள்ளது.

அதை வன்மையாக கண்டித்துள்ள அவர்கள், இப்படிப்பட்ட பேச்சுவார்த்தைகளிலிருந்து வெளியேறவேண்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சனை அறிவுறுத்தியுள்ளார்கள். பிரதமர் இல்லமும் இந்த திட்டத்தை நிராகரித்துள்ளதாக தெரிகிறது.

பிரெக்சிட்டுக்கு முன்னரே ஐரோப்பிய ஒன்றியம் பிரச்சனைகளை துவக்குகிறது என்றால், இனி என்னென்ன நடக்கப்போகிறதோ, ஜனவரி 31க்கு பிறகுதான் தெரியும்!

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers