பிரித்தானியாவின் கொடி அகற்றப்பட்டது... ஐரோப்பிய யூனியன் கட்டிடத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட காட்சி

Report Print Santhan in பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியுள்ள நிலையில், அதற்கு முன்ன தாக ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் கட்டிடத்தில் இருந்து கொடி அகற்றப்பட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற முடிவு செய்த பிரித்தானியா, அதற்கான வாக்கெடுப்பை மக்கள் முன் நடத்தியது.

இதில் பெரும்பாலானோர் பிரித்தானியா வெளியேற வேண்டும் என்று வாக்களித்ததால், அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.

இருப்பினும் இது அந்தளவிற்கு எளிதாக அமையாத காரணத்தினால், பிரக்ஸிட் விவகாரத்தில் 2 பிரதமர் பதவி விலகினர். அதன் பின் வந்த போரிஸ் ஜான்சன் இதில் சாதூர்யமாக செயல்பட்டார். அதாவது பிரக்ஸிட் விவகாரத்தில் ஜெயிக்க வேண்டும் என்றால், தேர்தல் நடக்க வேண்டும்.

அப்போது பெரும்பான்மை கிடைக்கும், மக்கள் ஆதரவு கிடைத்தாலும், பாராளுமன்றத்தில் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு இருந்ததால், போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார்.

அந்த தேர்தலில் அசுர பலத்துடன் ஆட்சிப் பொறுப்பேற்ற போரிஸ் ஜான்சன் அதன் பிறகு மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை தாக்கல் செய்து ஒப்புதலை பெற்றார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேறியது. அதன் படி நேற்று பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியது.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு முன், பெல்ஜியம் தலைநகர் Brussels-ல் இருக்கும் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் கட்டிடத்தில் இருந்து, பிரித்தானியாவின் கொடி அகற்றப்பட்டது.

இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்