சீனாவிலிருந்து கடைசி விமானத்தில் மீட்கப்பட்ட பிரித்தானியர்: வழியிலேயே உடல் நலம் பாதித்ததால் பரபரப்பு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் சிக்கியிருந்த பிரித்தானியர்களை மீட்கும் கடைசி விமானம் பிரித்தானியா திரும்பியுள்ள நிலையில், அதிலிருந்த ஒருவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே சீனாவிலிருந்து 83 பிரித்தானியர்கள் மீட்கப்பட்டுவிட்ட நிலையில், கடைசியாக ஒரு விமானம் 11 பிரித்தானியர்களை சீனாவிலிருந்து மீட்டுக் கொண்டுவந்தது.

அப்போது விமானத்தில் பயணித்த ஒருவருக்கு உடல் நலம் பாதித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த 11 பிரித்தானியர்களும், ஏற்கனவே மீட்கப்பட்ட 83 பேரும் இருக்கும் Arrowe Park மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அந்த ஒரு பயணியின் உடல் நலம் பாதித்ததால் திட்டத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டது.

அந்த ஒரு பிரித்தானியர் மட்டும் தனியாக ஒரு சிறப்பு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

உடல் நலம் பாதித்த உடன் தானே அவர் தன்னைத்தானே விமானத்திலேயே தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில், விமானம் தரையிறங்கியதும் சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்