40 நிமிடம்... 60 வினாடிகள்! லண்டன் தாக்குதல்தாரி குறித்து பொலிசார் வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில், கத்தியால் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியை பொலிசார் கண்காணித்து வந்ததாகவும், அதன் பின் தாக்குதல் நடந்த 60 வினாடிகளில் அவனை சுட்டு கொன்றுவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியா தலைநகர் லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள ஸ்ட்ரிட்தாம் ஹை சாலையில் நேற்று மாலை பொதுமக்கள் மீது Sudesh Amman என்ற தீவிரவாதி திடீரென்று நடத்திய கத்தி குத்து தாக்குதலில், 3 பேர் காயமடைந்தனர்.

இதில் ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட Sudesh Amman-ஐ பொலிசார் சுட்டு கொன்றனர்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகிய சில நாட்களிலே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதால், பிரித்தானியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஞாயிற்று கிழமை ஹை சாலையில் நடந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் 20 வயது மதிக்கத்தக்க Sudesh Amman எனவும், இவர் லண்டனை சேர்ந்தவர் என்பதும் அடையாளம் காணப்பட்டது.

பிரித்தானியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதன் காரணமாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட இந்த நபர் விடுவிக்கப்பட்டதால், இவரை தீவிரவாத எதிர்ப்பு கண்காணிப்பு குழுவினர் கவனித்து வந்தனர்.

அதன் படி சம்பவ தினத்தன்று உள்ளூர் நேரப்படி 13.20 மணியளவில் Sudesh Amman வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவர் கண்காணிக்கப்பட்டார். அப்போது அவன் சரியாக 14.00 மணி ஆவதற்கு சற்று முன்பு ஹை சாலையில் உள்ள கடைக்குள் நுழைவதை பார்க்க முடிந்தது.

அதன் பின் அவர் அங்கிருந்து கத்திய திருடிக் கொண்டு ஓடி வந்த போது, கத்தியால் வெளியில் இருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தினான்.

அவன் மக்களை தாக்க தொடங்கிய சுமார் 60 வினாடிகளுக்குள், பொலிசார் அவனை கொன்றனர். இதைத் தொடர்ந்து அவன் உடம்பில் ஏதோ சாதனம் ஒன்று இருப்பதை அதிகாரிகள் கண்டன, ஆனால் அது ஒரு போலியான தற்கொலை குண்டு வெடிப்பு சாதனம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் முதலுதவி வழஙக்கப்பட்டது. அதன் பின் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மூன்று பேரில் ஒருவருக்கு 40 வயது இருக்கும், அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கருதப்படுகிறது.

இருப்பினும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அந்த நபர் உள்ளார். அதே போன்று 50 வயது மதிக்கத்தக்க பெண்ணும், மிகவும் பலமான் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். 20 வயதில் மற்றொரு பெண்ணுக்கு சிறு காயங்கள் இருந்ததாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தீவிரவாதியை அதிகாரிகள் தொடர்ந்து பின் தொடர்ந்து வந்ததன் மூலம், பொலிசார் உடனடியாக அவனை சுட்டு கொல்ல முடிந்தது, இதனால் மிகப் பெரிய உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எங்கள் எண்ணங்கள் பாதிக்கப்பட்டவர்களுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் தொடர்ந்து இருக்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்