சீனாவில் இருக்கும் பிரித்தானியர்களுக்கு இதுதான் இறுதி வாய்ப்பு: வெளியுறவு அலுவலகம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீன நகரமான வுஹானை விட்டு வெளியேற விரும்பும் பிரித்தானியர்களுக்கு வெளியுறவு அலுவலகம் இறுதி அழைப்பு விடுத்துள்ளது.

உலகநாடுகள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தற்போது வரை உலகளவில் 427 பேர் இறந்துள்ளனர். மேலும், 20,000 க்கும் மேற்பட்டோர் நோயால் பாதிப்படைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனா நகரமான வுஹானில் இருந்தே இந்த தொற்றுநோய் பரவியிருக்கலாம் என நம்பப்படுவதால், உலகநாடுகள் பலவும் அங்கு சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானத்தின் மூலம் மீட்டு வருகின்றன.

200க்கும் மேற்பட்ட தங்கள் நாட்டு குடிமக்களை மீட்டுவிடலாம் என பிரித்தானியா இதுவரை இரண்டு விமானங்களை அனுப்பி வைத்திருந்தது. ஆனால் மொத்தம் 94 பிரித்தானியர்கள் மட்டுமே நெருக்கமான பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டனர்.

அவர்களில் எவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்படவில்லை. ஆனால் அனைவரும் மெர்செசைடில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பிற நாடுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட அதிகமான விமானங்கள் இந்த வார இறுதியில் சீனாவிற்கு வரவிருப்பதாகவும், மக்கள் வெளியேற இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கலாம் எனவும் பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்