பிரித்தானியாவில் சீன குழந்தைகளின் மீது இனவெறி தாக்குதல்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் இருக்கும் சீன குழந்தைகள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்படுவதாக பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் சூழலில், சீனர்கள் மீது நடத்தப்படும் இனவெறி தாக்குதலும் அதிகரித்து வருகிறது.

கொரோனா பயத்தால் சீன குழந்தைகள் பிரித்தானிய பள்ளிகளில் தங்கள் நண்பர்களால் ஒதுக்கி வைக்கப்படுவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.

உங்களுக்கு வைரஸ் இருப்பதால் உங்களுடன் விளையாடக்கூடாது என்று என்னுடைய அம்மா கூறினார்கள் என சக நண்பர்கள் ஒதுக்குவதாக சீன குழந்தைகளின் பெற்றோர் வருத்தும் தெரிவிக்கின்றனர்.

இது ஒரு சீன வைரஸ் என்ற 'நியாயமற்ற' கருத்தின் காரணமாக மக்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதேபோல பிரித்தானியாவில் கடை வைத்திருக்கும் சீனாவை சேர்ந்த 54 வயது நபரை, கடையை மூடுமாறு மிரட்டியதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் பிரித்தானியாவில் இருக்கும் சீன மக்கள் பெரும் வேதனை தெரிவிக்கின்றனர்.

முன்னதாக உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸால், சீனாவில் 425 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு, உலகளவில் 20,600க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்