இளவரசர் ஹரி வெளியேறிய பின்னர் ராணியாரை உலுக்கிய சம்பவம்: பிரிவை சந்திக்கும் இன்னொரு பேரன்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய ராணியாரின் மிகவும் பிரியமான பேரன் பீற்றர் பிலிப்ஸ் தமது மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக வெளியான தகவல் ராணியாரை மிகவும் பாதித்ததாக கூறப்படுகிறது.

ராணியார் இரண்டாம் எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப் தம்பதியின் ஒரே மகளான இளவரசி ஆனின் மகன் பீற்றர் பிலிப்ஸ் என்பவரே தற்போது விவாகரத்து செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார்.

குறித்த தகவலை பீற்றர் பிலிப்சின் மனைவி 41 வயதான Autumn ராணியாரிடம் தெரிவித்துள்ளார்.

நீண்ட 12 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பின்னர் இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளனர்.

குறித்த தகவலே ராணியாரை மிகவும் பாதித்துள்ளது. மட்டுமின்றி ஹரி மற்றும் மேகன் தம்பதி அரச பொறுப்புகளில் இருந்து வெளியேறியது போன்று,

அதே பாதையை கனேடியரான இளவரசி Autumn பின்பற்ற இருப்பதாக தகவல் ஒன்று கசிந்ததை அடுத்தே இளவரசர் பீற்றர் பிலிப்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பீற்றர் பிலிப்ஸ் மற்றும் Autumn தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். Autumn கனேடியர் என்பதால், இவர்கள் பிள்ளைகளுக்கும் இரட்டைக் குடியுரிமை உள்ளது.

இதனால் ஹரி மேகன் தம்பதி போன்று கனடாவில் Autumn குடியேறினாலும், எந்த சட்டச் சிக்கலும் இன்றி அங்கே வசிக்க முடியும்.

பீற்றர் பிலிப்ஸ் தம்பதிகளின் இந்த பிரிவு முடிவு அவர்களுக்கு நெருங்கியவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பேரன் பீற்றர் பிலிப்ஸ் போன்றே ராணியாருக்கு மிகவும் நெருக்கமானவர் Autumn.மிகவும் புத்திசாலியான அவரை ராணியார் எப்போதும் தம் பக்கத்திலேயே வைத்துக் கொண்டுள்ளார்.

ஹரி மற்றும் மேகன் தம்பதி எடுத்துள்ள முடிவே இளவரசி Autumn-மும் கனடாவில் குடியேற காரணமாக இருக்கலாம் என்ற தகவலும் கசிந்துள்ளது.

ஆனால் தமது கணவருடன் அவர் மனக்கசப்புகளை சந்தித்து வருவதாக Autumn-கு மிகவும் நெருங்கியவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers