இடுப்பெலும்பு முறிவுக்காக மருத்துவமனைக்கு சென்ற முதியவர்: எக்ஸ்ரேயில் தெரிந்த உருவத்தால் அதிர்ச்சி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கீழே விழுந்து இடுப்பு எலும்பு முறிந்த முதியவர் ஒருவருக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரேயில் ஒரு மண்டை ஓடு தெரிந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.

பிரித்தானியாவின் பக்கிங்காம்ஷையரைச் சேர்ந்த Steve, தனது தந்தை கீழே விழுந்துவிட்டதால் அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அவரது தந்தையான Royக்கு இடுப்பெலும்பில் முறிவு சந்தேகிக்கப்பட்டதால் மருத்துவர்கள் அவருக்கு இடுப்பில் ஒரு எக்ஸ்ரே எடுத்தனர்.

எக்ஸ்ரேயைப் பார்த்த Steve, அதில் ஒரு மண்டை ஓடு தெரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

Credit: Hyde News & Pictures Ltd

அதை எடுத்துக்கொண்டு மருத்துவரிடம் Steve ஓட, மருத்துவருக்கும் அது என்ன என்று தெரியவில்லை.

Roy என்னவோ உடல் நலம் தேறி வீடு திரும்பிவிட்டாலும், அவரது இடுப்பெலும்பு எக்ஸ்ரேயில் தெரிந்த முகம் மட்டும் யாருடையது என்கிற விடயம் இன்னமும் மர்மமாகவே உள்ளது.

Credit: Hyde News & Pictures Ltd
Credit: Hyde News & Pictures Ltd

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers