நடுவானில் பயணிகள் விமானம் மீது தாக்கிய மின்னல்..! கமெராவில் சிக்கிய திகிலூட்டும் காட்சி

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தை நடுவானில் மின்னல் தாக்கிய சம்பவம் வெளியாகியுள்ளது.

இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மழை என மோசமான காலநிலை குறிப்பாக விமானப் போக்குவரத்துக்கு நிறைய சிக்கல்களை உருவாக்கும்.

தற்போது சியரா புயல் ஐரோப்பாவை உலுக்கிய வருகிறது. இந்நிலையில் பிரித்தானியா நகரமான பர்மிங்காம் விமான நிலையத்திலிருந்து டப்ளினுக்கு புறப்பட்ட ஏர் லிங்கஸ் விமானமே மின்னல் தாக்குதலில் சிக்கியுள்ளது.

இந்த சம்பவம் பர்மிங்காம் பகுதியில் இருந்து குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்து சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது. அதில், பயணிகள் விமானத்தைத் மின்னல் தாக்கிய மின்னல் காட்சி சிக்கியது.

பர்மிங்காம் விமான நிலைய செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, மின்னல் தாக்கியதில் விமானத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை மற்றும் பத்திரமாக டப்ளினில் தரையிறங்கியது.

மின்னல் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers