மூன்று நாடுகளுக்கு கொரோனா வைரஸை பரப்பிய பிரித்தானியர் இவர்தான்: முதன்முறையாக வெளியான புகைப்படம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

மூன்று நாடுகளுக்கு கொரோனா வைரஸை பரப்பிய பிரித்தானியரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூருக்கு சென்று கொரோனா வைரஸ் தொற்றை பெற்றுக்கொண்டு வந்து, மூன்று நாடுகளுக்கு பரப்பிய பிரித்தானியரின் பெயர் Steve Walsh (53) என்பது தெரியவந்துள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான Steve, சிங்கப்பூரில் ஒரு கான்பரன்சுக்காக சென்றிருந்தவர், அங்கிருந்து கொரோனா வைரஸ் தொற்றை வாங்கிக்கொண்டு வந்துவிட்டார்.

ஆல்ப்ஸ் மலையில் விடுமுறையைக் கழித்த பின் பிரித்தானியா திரும்பியுள்ளார் அவர். தற்போது கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ள அவர், அதற்கு முன்பே நூற்றுக்கணக்கானோருடன் தொடர்பிலிருந்திருக்கிறார்.

அதன் காரணமாக, அவரிடமிருந்து பிரான்சிலுள்ள சிலர், அவர்களிடமிருந்து ஸ்பெயினில் உள்ள சிலர் என பலருக்கும் வைரஸ் தொற்று பரவிவிட்டது.

தன்னால் மற்றவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளானதற்காக வருத்தம் தெரிவித்துக்கொண்டுள்ளார் Steve.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்