பிரித்தானியாவில் தற்கொலை செய்து கொண்ட இந்திய மாணவன்? தந்தையை போல் மரணம்! சந்தேகங்கள்

Report Print Abisha in பிரித்தானியா

இந்திய மாணவரான ஷுபான்சோ சந்தேகத்துக்கிடமான முறையில், தங்கியிருந்த குடியிருப்பில் இறந்து கிடத்ததாக அவரது தாயார் குறிப்பிட்டுள்ளார்.

20 வயதாகும் ஷுபான்சோ புல், லண்டனில் உள்ள சசெக்ஸ் பல்கலை கழகத்தில் பட்ட படிப்பு மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், அவர் தங்கியிருந்த குடியிருப்பில் இறந்து கிடந்தார்.

இது குறித்து பேசிய ஷுபான் சோ புல்-ன் தாயார் “ நான் அதிர்ச்சியில் இருக்கிறேன். அவர் அந்த பல்கலைகழகத்தில் சேர்ந்து ஆறு மாதங்களே ஆகின்றன. கடைசியாக பெப்ரவரி 8ஆம் திகதி காலையில் வாட்ஸ்அப்பில் பேசினான். மறுநாள் காலையில் இட்டாநகரில் உள்ள சிபிஐ அலுவலகத்திலிருந்து அவன் கொலை செய்யப்பட்டதாக எங்களிடம் தெரிவித்தனர். பெப்ரவரி 8 மாலை அது நடந்தது என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது” என்று கூறினார்.

ஷுபான் சோ கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தயார் கூறினாலும், ஊடகங்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஷுபான் சோ-வின் தந்தை கலிக்கோ புல் 2016-ம் ஆண்டு 6 மாதம் முதலமைச்சராக பதவி வகித்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து பாஜக ஆதரவுடன் அருணாசலப் பிரதேச முதல்வராக ஆட்சி பிடித்தார்.

கலிக்கோ புல்

ஆனால், அது நீதிமன்ற உத்தரவால் பறிக்கப்பட்டது. ஆறே மாதத்தில் பதவி இழந்த அவர், தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்வதற்கு முன், அவர் எழுதியிருந்த கடிதத்தில், நீதித்துறை மற்றும் மாநில அரசியலில் உள்ள ஊழல் தொடர்பாக பல தகவல்கள் இடம் பிடித்திருந்தன. இது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று காலிக்கோ புல்-ன் முதல் மனைவி கோரியிருந்தார்.

ஆனாலும், அந்த வழக்கு விசாரணையும் சர்ச்சையும் தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையில், ஷுபான் சோவின் மரணம் குறித்து பல சந்தேகங்களை எழுப்புவதாக அவரது தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers