புற்றுநோயால் இறந்த தாய்... சோகத்தில் மகள் எடுத்த பயங்கர முடிவு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தனது தாய் புற்றுநோயால் உயிரிழந்த சோகத்தைத் தாங்க இயலாமல், வீட்டையே கொளுத்தி உயிரிழந்துள்ளார் அவரது மகள்.

பிரித்தானியாவின் Suffolk என்ற பகுதியைச் சேர்ந்த Pamela Tierney (78) என்ற பெண் குடல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அவரும் அவரது மகள் Julie Tierney (50) என்பவரும் வாழ்ந்த வீடு ஒருநாள் தீப்பற்றி எரிந்துள்ளது.

வெடிகுண்டு வெடித்தது போன்ற ஒரு சத்தம் கேட்டு அங்கு வந்த அதிகாரிகள், அந்த வீடு தீப்பற்றி எரிவதைக் கண்டுள்ளனர்.

மனித உடல் வெப்பத்தை வைத்து உடல்கள் ஏதேனும் உள்ளனவா என அறியும் ஒரு கருவி மூலம் சோதித்தபோது, அந்த வீட்டிற்குள் இரண்டு உடல்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

Credit: Terry Harris

அவற்றைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பியதில் அவை Pamela மற்றும் Julieயுடையவை என்பது தெரியவந்துள்ளது.

பல் அடையாளங்களை வைத்து அந்த உடல்கள் Pamela மற்றும் Julieயுடையவை என்பது உறுதிசெய்யப்பட்டது.

அத்துடன் Pamela புற்றுநோயால் அவதியுற்று வந்ததும் அதிலிருந்து தெரியவந்தது.

Pamela புற்றுநோயால் உயிரிழக்க, தாய் இறந்த சோகத்தைத் தாங்க இயலாமல், இரண்டு நாட்கள் தாயின் உடலுடன் இருந்த Julie, பின்னர் வீட்டைச் சுற்றிலும் பெட்ரோலை ஊற்றி கொளுத்திவிட்டு, வீட்டுக்குள் சென்று தாயின் உடல் அருகே படுத்துக்கொண்டிருக்கிறார்.

அவர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக உடற்கூறு ஆய்வு தெரிவிக்கிறது. அவர்கள் வாழ்ந்து வந்த மாளிகை போன்ற அந்த பெரிய வீடு முழுவதும் தீயில் எரிந்து நாசமாகிவிட்டது.

அக்கம் பக்கத்தவர்களிடம் விசாரித்ததில், Julieயும் அவரது தாயும் யாருடனும் அதிகம் பேசுவதில்லை என்றும், எப்போதும் தனிமையிலேயே இருக்க விரும்புவார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

தாய் இறந்ததற்காக மகளும் தானும் வீட்டைக்கொளுத்தி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

Credit: Terry Harris

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்