பிரித்தானியாவில் சிறையையும் விட்டுவைக்காத கொரோனா?... மயங்கிச் சரிந்த கைதியால் அச்சம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தாய்லாந்திலிருந்து பிரித்தானியாவிற்கு நாடுகடத்தப்பட்ட ஒரு கைதி சிறையில் மயங்கிச் சரிந்த சம்பவம் அவருக்கு கொரோனா வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதால், சிறை வட்டாரத்தில் கடும் அச்சம் நிலவுகிறது.

Oxfordshireஐச் சேர்ந்த Mark Rumble (31), போதை கடத்தல் குற்றத்திற்காக தாய்லாந்திலிருந்து ஜனவரி 27 அன்று பிரித்தானியாவுக்கு நாடுகடத்தப்பட்டார். அவர் Bullingdon சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

நேற்று முன் தினம் அவர் தனது அறையில் திடீரென மயங்கிச் சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அவருடன் இருந்த மேலும் ஒருவருக்கு ப்ளூ போன்ற அறிகுறிகள் காணப்படுவதால், அவரும் மூன்றாவது கைதி ஒருவருமாக என மொத்தம் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

அவர்களது பரிசோதனை முடிவுகள் இன்னும் 24 மணி நேரத்திற்குள் கிடைத்துவிடும்.

Rumble மற்றும் அவரது சக கைதிகள் இருவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற தகவல், சிறையில் இருக்கும் மற்றவர்களை கடும் அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.

அடுத்த 72 மணி நேரத்திற்கு சிறை அறைகளுக்குள்ளிருந்து வெளியே வர யாருக்கும் அனுமதியில்லை. அத்துடன் உணவும் அவர்களுக்கு தட்டுகளில் வைத்து கதவு துவாரம் வழியாக தள்ளிவிடப்படும்.

மயங்கிச் சரிந்த Rumble, சிறப்பு மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், சிறையிலிருக்கும் Rumbleஐ முதலில் பரிசோதித்த ஒரு நர்ஸ், தனக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாமோ என்ற அச்சத்தில் தன்னைத்தானே தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers