வெறும் £10 பணம் வைத்திருந்த பர்ஸ் திருடு போனதற்கு கதறி அழுத பெண்! உண்மை மதிப்பு குறித்து உருக்கமான தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் திருடு போன தனது பணப்பையில் குறைந்த பணம் இருந்த போதிலும் அதை உணர்ச்சிப்பிணைப்பான விடயமாக கருதும் பெண் அது தொடர்பில் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார்.

Coalville நகரை சேர்ந்தவர் Pauline Walker (86).

Pauline ஷாப்பிங் சென்ற போது அவரின் பணப்பையை (பர்ஸ்) யாரோ திருடி சென்றுள்ளனர்.

இது Pauline-க்கு பெரும் கவலையை அளித்துள்ளது. அதில் வெறும் £10 மட்டுமே அவர் வைத்திருந்த போதிலும், பல வருடங்களாக வைத்திருந்த பணப்பையை Pauline உணர்ச்சிப்பிணைப்பான மதிப்பு கொண்ட பொருளாக பார்ப்பதால் அவர் மனம் நொறுங்கி போயுள்ளார்.

இதையடுத்து தனது கணவர் Geoff உடன் சேர்ந்து உருக்கமான பதிவை சமூகவலைதளத்தில் Pauline வெளியிட்டுள்ளார்.

அதில், அந்த பணப்பை என் உணர்வுகளோடு தொடர்புடையது, தயவு செய்து அதை யார் எடுத்திருந்தாலும் என்னிடம் திருப்பி கொடுத்து விடுங்கள்.

அதற்குள் என்னுடய மருந்துகள், எனக்கு மிகவும் நெருக்கமானவர்களின் தொலைபேசி எண்களும் உள்ளது.

உள்ளிருந்த பணம் எனக்கு முக்கியமில்லை, அந்த பர்ஸ் தான் முக்கியம் என கூறியுள்ளார்.

இந்த பதிவை பார்த்த பலரும் நாங்கள் உங்களுக்கு பர்ஸ் வாங்கி தருகிறோம் என கூறினார்கள். இதற்கு பதிலளித்த Pauline, உங்களின் ஆதரவுக்கு நன்றி.

பர்ஸ் திருடு போனது எனக்கு கவலையளித்தாலும் உங்களின் ஆதரவு எனக்கு உற்சாகத்தை கொடுக்கிறது.

விரைவில் அந்த பர்ஸ் என்னிடம் வந்து சேரும் என நம்புகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers