வரலாற்றில் முதன் முறையாக.. இல்லற வாழ்வில் இணைந்த பெண்கள்! வெகு விமரிசையாக நடந்த திருமணம்!

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவின் ஒரு பிராந்தியமான வடக்கு அயர்லாந்தின் முதல் ஒரே பாலின திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

26 வயதான ராபின் பீப்பள்ஸ் மற்றும் 27 வயதான ஷர்னி எட்வர்ட்ஸ் என்ற இரு பெண்களும் இல்லற வாழ்வில் இணைந்துள்ளனர்.

கோ அன்ட்ரிமின் கேரிக்ஃபெர்கஸில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த ஒரு விழாவில் பீப்பிள்ஸ்-எட்வர்ட்ஸ் திருமணம் செய்து கொண்டனர். இந்த விழாவில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என சுமார் 50 பேர் கலந்துக்கொண்டனர்.

கடந்த ஆண்டு ஒரே பாலின திருமணத்தை அனுமதிக்கும் சட்டம் பிரித்தானியா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து பீப்பள்ஸ்-எட்வர்ட்ஸ் ஜோடி தங்களது திருமணத்தை வெகு விமர்சையாக நடத்த முடிவு செய்துள்ளனர். ஜோடியாக அவர்களின் ஆறாவது ஆண்டு நிறைவுவிழாவை குறிக்கும் நாளில் திருமணம் செய்துக்கொண்டனர்.

இந்த மாற்றத்திற்காக போராடி அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம் என எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers