பிரித்தானியாவில் 5 பாடசாலைகளுக்கு கொரோனா வைரஸ் எச்சரிக்கை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் பிரைட்டன் நகரில் அமைந்துள்ள 5 பாடசாலைகளுக்கு கொரோனா வைரஸ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த 5 பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கூறப்படுகிறார்கள்.

இது உள்ளூர் சாரணர் தலைவர் ஒருவரால் இந்த நோய் குறித்த பாடசாலைகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்பது தெரியவந்ததன் பின்னரே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிலும் ஐரோப்பாவிலும் 53 வயதான ஸ்டீபன் வால்ஷ் என்பவராலையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டது என்பது உறுதியாகியுள்ளது.

தற்போது தீவிர கண்காணிப்பில் உள்ள அவர், தாம் முழுமையாக குணமடைந்துள்ளதாகவும், நோய் பரவ தாமே காரணம் என அறிந்த உடன், தீவிர நடவடிக்கை மேற்கொண்டதாகவும் அவர் நேற்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பிரைட்டனில் இயங்கிவரும் 5 பாடசாலைகள் தங்களை தனிமைப்படுத்தலில் வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரைட்டனில் உள்ள மிகப்பெரிய மேல்நிலைப் பாடசாலைகளில் ஒன்று நேற்று பெற்றோர்களிடம் கொரோனா வைரஸ் தொடர்பில் சந்தேகிக்கப்படுவதாக எச்சரித்துள்ளது.

சுமார் 1,300 மாணவர்களைக் கொண்ட Varndean பாடசாலை, அதனுடன் தொடர்புடைய ஒருவரை 14 நாட்களுக்கு சுய கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டதாக அறிவித்துள்ளது.

இதேப் போன்று ஹோவ் பகுதியில் செயல்பட்டு வரும் செயின்ட் மேரி கத்தோலிக்க துவக்கப்பாடசாலையில் கல்வி பயின்று வரும் ஸ்டீபன் வால்ஷின் இரு பிள்ளைகள் கொரோனா வைரஸ் தொடர்பில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்