லண்டனில் பட்டப்பகலில் திருடனுடன் போராடிய பெண்! கீழே விழுந்ததில் உடைந்த பற்கள்.. சிசிடிவி புகைப்படம் வெளியீடு

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் பெண்ணிடம் இருந்த பையை திருடன் திருட முயன்ற போது அவனுடன் போராடிய பெண் கீழே விழுந்து பற்களை உடைத்து கொண்டுள்ளார்.

தெற்கு லண்டனில் உள்ள Reeves Corner டிராம் நிறுத்தத்தில் சில தினங்களுக்கு முன்னர் பட்டப்பகல் 11.30 மணிக்கு பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு ஆண் திடீரென பெண் கையில் வைத்திருந்த பையை திருட முயன்றான். ஆனால் பையை விடாமல் திருடனுடன் அவர் போராடினார்.

இதையடுத்து நிலைதடுமாறி கீழே விழுந்த அப்பெண்ணின் பற்கள் உடைந்ததோடு முகத்திலும் காயங்கள் ஏற்பட்டது.

ஆனால் திருடனை நோக்கி அப்பெண் கத்தியபடி இருந்த நிலையில் அவன் அங்கிருந்து வெறும் கையுடன் ஓட்டம் பிடித்து ரயில் நிலையம் நோக்கி சென்றான். அவன் ரயிலில் ஏறி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

இதனிடையில் போக்குவரத்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவான நபர் ஒருவரின் முகத்தை வெளியிட்டுள்ளனர்.

அவரிடம் விசாரித்தால் சம்பவம் தொடர்பான மேலும் பல முக்கிய தகவல்கள் தங்களுக்கு கிடைக்கும் என பொலிசார் நம்புகிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers