விவாகரத்து வேண்டாம்... பேரப்பிள்ளைகளிடம் கெஞ்சிய பிரித்தானிய மகாராணியார்: வெளியான தகவல்கள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தனது செல்ல மகளான ஆனின் மகனும் தனது பேரனுமான பீற்றர் பிலிப்ஸ் மற்றும் அவரது மனைவியிடம், விவாகரத்து செய்ய அவசரப்பட வேண்டாம் என மகாராணியார் கெஞ்சியதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

மகாராணியாரின் செல்லப்பேரன் பீற்றர் பிலிப்ஸ் மற்றும் அவரது மனைவி ஆட்டம் விவாகரத்து செய்ய இருப்பதாகவும், ஹரி மேகனைப் பின்பற்றி ஆட்டம் தனது பிள்ளைகளுடன் கனடா சென்று குடியேற இருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

ஆனால், ஹரி மேகன் கனடா புறப்படும் செய்தி வெளியாவதற்கு முன்பே, பீற்றர் ஆட்டம் தம்பதி பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் கனடாவுக்கு குடிபோகும் எண்ணமும் ஆட்டமுக்கு இல்லையாம். பீற்றர் ஆட்டம் தம்பதி, கடந்த கோடையில் மகாராணியாரை சந்தித்தபோது, இந்த விடயத்தை அவரிடம் தெரிவித்துவிட்டார்களாம்.

ஆனால், விவாகரத்து விடயத்தில் அவசரப்படவேண்டாம் என மகாராணியார் அவர்களைக் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், பீற்றர் மனைவியைக் குறித்த இதுவரை வெளிவராத சில தகவல்களும் இப்போது வெளியாகியுள்ளன.

பீற்றரின் மனைவியாகிய ஆட்டம், மொன்றியலைச் சேர்ந்த முடி திருத்தும் ஒருவரின் மகளாம்.

கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்பட்டாலும், ஆட்டமுக்கு எப்போதும் பார்ட்டிகளுக்கு போவதில் கொள்ளை ஆசையாம்.

மகாராணியார் குடும்பத்தின் முன் தன்னை கட்டுப்பாடுகள் கொண்ட ஒரு குடும்பப் பெண்ணாகக் காட்டிக்கொண்ட ஆட்டத்திற்கு இன்னொரு பக்கமும் இருந்திருக்கிறது.

ஆம்! ஆட்டம், பார்ட்டிகளில் நண்பர்களின் மடியில் அமர்ந்து ஜாலியாக ஏராளம் மதுபானம் அருந்துவதை பலரும் பார்த்திருக்கிறார்களாம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers