கொரோனோ வைரஸை 11 பேருக்கு பரப்பிய பிரித்தானியர் இப்போது எப்படி இருக்கிறார்? உருக்கத்துடன் சொன்ன நன்றி

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நபர், தற்போது முழுவதுமாக குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

பிரித்தானியாவின் East Sussex-ல் இருக்கும் Hove பகுதியை சேர்ந்தவர் Steve Walsh(53). தொழிலதிபரான இவர் சமீபத்தில் சிங்கப்பூருக்கு சென்றிருந்த போது, அங்கு கொரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளானார்.

இது தெரியாமல் ஆல்ப்ஸ் மலைக்கு விடுமுறை கழிக்க சென்ற, இவர் அங்கு நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பழகியதாகவும், இதன் காரணமாக பிரான்சிலுள்ள சிலருக்கும், அவர்களிடமிருந்து ஸ்பெயினில் இருக்கும் சிலருக்கு இந்த நோய் பரவியதாக கூறப்பட்டது.

இவரால் 11 பேருக்கு கொரோனா வைரஸ் பரவிய நிலையில், தற்போது முழுவதுமாக குணமடைந்து Guy's and St Thomas மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

Steve Walsh

அவருக்கு கொரோனா வைரஸ் குறித்து இரண்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அந்த இரண்டு பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.

விடுமுறை எல்லாம் கழித்துவிட்டு பிரித்தானியா திரும்பிய இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கடந்த 6-ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனையில், வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், இவர் மூலம் சிலருக்கு கொரோனோ பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தற்போது வீடு திரும்பியுள்ள Steve Walsh கூறுகையில், நான் பூரணம நலமாக திரும்பியதற்கு பெரிதும் உதவிய மருத்துவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நான் இப்போது குணமாகி வீட்டில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. நான் நிச்சமாக NHS-க்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எனது குடும்பத்தினருடன் நான் திரும்பியது நல்லது, அதே சமயம் இனிமேல் எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

NHS இயக்குனரும் பேராசியருமான Keith Willett கூறுகையில், Steve Walsh-க்கு கொரோனா வைரஸ் குறித்து இரண்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒன்று 24 மணி நேரத்திற்கு இடைவெளியில் நடத்தப்பட்ட சோதனை, இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

Dailymail

சிகிச்சைக்கு பின் அவர் முழுவதும் குணமடைந்துவிட்டார். அவரின் அறிகுறிகள் அந்தளவிற்கு பெரிதானவை அல்ல, அவரால் இனி பொதுமக்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை.

அவர் தனது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கும், தனது குடும்பத்தினருடன் இருப்பதற்கும் ஆர்வமாக உள்ளதாக Keith Willett தெரிவித்தார்.

Steve Walsh 11 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பை அறியாமல் பரப்பியதாக சந்தேகிக்கப்படுகிறது. அதில் பாதிக்கப்பட்ட 5 பேர் இங்கிலாந்திலும், ஐந்து பேர் பிரான்சிலும், ஒருவர் மஜோர்காவிலும் உள்ளனர்.

பிரித்தானியாவில் தற்போது வரை 9 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் நாட்டின் தலைநகர் லண்டனில் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்