கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் லண்டன் சுரங்க ரயில் தடம்: எச்சரிக்கும் நிபுணர்கள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

லண்டன் சுரங்க ரயில் கொரோனா வைரஸுக்கு மையமாக இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா பாதிப்புக்கு இதுவரை உலகம் முழுவதும் 1,369 பேர் பலியாகியுள்ள நிலையில், பிரித்தானியாவில் கொரோனாவுக்கு இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 9-வது நபர் பெண் எனவும், அவர் லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சையில் உள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் அதிக சனத்தொகை கொண்ட லண்டன் நகரமானது கொரோனா அச்சுறுத்தலுக்கு இலக்காக அதிக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ராபின் தாம்சன் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

மக்கள் அடர்த்தியான பகுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டால், தொடர்ந்து நபருக்கு நபர் பரவும் ஆபத்து அதிகம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Credit: Alamy

போக்குவரத்துக்கு மையமாக கருதப்படும் லண்டன் நகரம் மற்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் சுரங்க ரயில் சேவை ஆகியவை அச்சுறுத்தலை மேலும் அதிகரிப்பதாகவே உள்ளது என்கிறார் டாக்டர் ராபின் தாம்சன்.

லண்டனில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதன் தாக்கம் கண்டிப்பாக அதிகம் என்றே கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் லண்டனில் வரும் சீன பார்வையாளர்களின் எண்ணிக்கையால் ஐரோப்பாவின் வேறு எந்த நகரத்தையும் விட லண்டனுக்கு அதிக ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மார்ச் நடுப் பகுதி வரை சீனாவிலிருந்து 142,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் லண்டனுக்கு வருகிறார்கள்.

இதுவரை 1,759 பேர் கொரோனா வைரஸ் தொடர்பில் பிரித்தானியாவில் சோதனைக்கு உட்படுத்தியதில், 9 பேருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்