பிரித்தானிய நிதி அமைச்சராக இந்திய வம்சாவளி ரிஷி சுனாக் நியமனம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய சேன்ஸலர் சாஜித் ஜாவித் ராஜினாமா செய்துள்ள நிலையில் இந்திய வம்சாவளி ரிஷி சுனாக் பிரித்தானியாவின் நிதி அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் ஏற்படுத்திய மாறுதல்களின் ஒருபகுதியாக ரிஷி சுனாக் நிதி அமைச்சராக முக்கிய பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.

இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனாவர் இந்த ரிஷி சுனாக். பிரித்தானிய உள்விவகார செயலராக பொறுப்பில் இருக்கும் பிரிதி பட்டேலுக்கு பின்னர் நாட்டின் முக்கிய பொறுப்புக்கு வரும் ரிஷி சுனாக் ரிச்மண்ட் பகுதி பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்