பிரித்தானியாவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட பிரபல தொழிலபதிபர்! சிறையில் அடைத்த பொலிசார்

Report Print Santhan in பிரித்தானியா
517Shares

கிரிக்கெட் சூதாட்டத்தில் இடைத்தரராகச் செயல்பட்டதாக கருதப்படும் சஞ்சீவ் சாவல் பிரித்தானியாவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தென் ஆப்பிரிக்கா அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது.

அப்போது தென் ஆப்பிரிக்கா அணியின் தலைவராக இருந்த ஹான்சி குரோஞ்சேவுடன் இணைந்து சஞ்சீவ் சாவ்லா சூதாட்டத்தில் ஈடுபட்டதாகப் புகாா் எழுந்தது.

இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. டில்லியை சேர்ந்தவரும், தொழிலதிபருமான சஞ்சீவ் சாவ்லா கடந்த 1996-ஆம் ஆண்டே பிரித்தானியாவுக்கு சென்றதும், அதன் பின் இந்தியாவுக்கு வந்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனால் அவரது பாஸ்போர்ட்டை இந்திய அரசு 2000-ஆம் ஆண்டு ரத்து செய்தது.

இருப்பினும், அடுத்த 5 ஆண்டுகளில் அவா் பிரித்தானியாவின் பாஸ்போர்ட் பெற்றதால், அவரைக் கைது செய்து நாடு கடத்த வேண்டுமென்று பிரித்தானியா அரசுக்கு டில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சஞ்சீவ் சாவ்லா கைது செய்யப்பட்டாா்.

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. இதற்கான விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

விசாரணையின் முடிவில் அவரை நாடு கடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதால், அதற்கு எதிராக பிரித்தானிய உள்துறை அமைச்சகத்தின் செயலரிடம் சஞ்சீவ் சாவ்லா முறையிட்டாா். இந்த முறையீடு கடந்த மாதம் நிராகரிக்கப்பட்டது.

அதன் பின் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் அவா் முறையிட்டாா். அந்த முறையீடும் கடந்த வாரம் நிராகரிக்கப்பட்டதால், சஞ்சீவ் சாவ்லா கடந்த வியாழக்கிழமை பிரித்தானியாவில் இருந்து, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா்.

டில்லி வந்த அவா் திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா். அவரிடம் டில்லி பொலிசார் குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனா்.

குற்றவாளிகளை நாடு கடத்துவது தொடா்பாக இந்தியா மற்றும் பிரித்தானியா இடையே கடந்த 1992-ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து, பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் நபா் சஞ்சீவ் சாவ்லா என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்