நாய்க்குட்டிகளைக் கடித்த நாய்... பதிலுக்கு நாயைக் கடித்தவருக்கு நேர்ந்த சோகம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
110Shares

தனது நாய்க்குட்டிகளைக் கடித்த நாயை திருப்பிக் கடித்தார் பிரித்தானியர் ஒருவர்.

அவர் கடித்த கடியில் அவரது பல்லே போனதுதான் பெரும் சோகம். இந்த சம்பவம் நடந்தது இங்கிலாந்தின் Redcar என்ற பகுதியில்... தனது நாய்க்குட்டிகள் இரண்டை நடத்தி சென்று கொண்டிருந்திருக்கிறார் மார்ட்டின் ஃப்லெச்சர் (55).

அவை Jack Russell வகை நாய்க்குட்டிகள். அப்போது மற்றொருவர் அங்கு Rottweiler என்னும் பெரிய வகை நாயுடன் வர, எதிர்பாராவிதமாக திடீரென அந்த நாய் மார்ட்டினுடைய நாய்க்குட்டிகள் மீது பாய்ந்து அவற்றைக் கடித்துக் குதறத் தொடங்கியுள்ளது.

தன் செல்ல நாய்க்குட்டிகள் கடிபடுவதைக் கண்ட மார்ட்டின் அந்த நாயைத் துரத்த முயல, அவரது கையைக் கடித்துள்ளது அந்த நாய்.

மீண்டும் அது நாய்க்குட்டிகளைக் குதற, வேறு வழியில்லாமல் அந்த நாய் மீது பாய்ந்த மார்ட்டின் அதன் காதைப் பிடித்துக் கடித்து இழுத்திருக்கிறார்.

நாயைக் கடித்த கடியில், மார்ட்டினின் பல்லே உடைந்து வந்துவிட்டிருக்கிறது. அதற்குள், அந்த நாயின் உரிமையாளர் அதை இழுத்துக்கொண்டு சென்றுள்ளார். மார்ட்டினின் கையிலும், நாய்க்குட்டிகளில் உடலிலும் இரத்தம் கொட்ட, மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அவர்.

அங்கு மார்ட்டினின் கையில் ஐந்து தையல்கள் போடப்பட்டுள்ளதுடன், அவருக்கு செயற்கைப் பல்லும் பொருத்தப்பட்டுள்ளது.

அவரது நாக்குட்டிகளின் நிலைமை இன்னும் மோசம், ஒரு நாய்க்குட்டிக்கு 36 தையல்கள் போடப்பட்டுள்ளன.

மொத்தத்தில் நாய்க்குட்டிகளுக்காக மட்டும் மார்ட்டின் 800 பவுண்டுகள் செலவிட வேண்டி வந்திருக்கிறது.

மேலும் மார்ட்டினுக்கு டெட்டனஸ் ஊசியும், ஆண்டிபயாட்டிக்குகளும் பரிந்துரைத்துள்ளார் அவரது மருத்துவர்.

என்றாலும், தனது செல்ல நாய்க்குட்டிகளின் உயிரைக் காப்பற்றியதற்காக தான் பெருமகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார் அவர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்