எகிறும் கொரோனா இறப்பு... பிரித்தானியாவில் 40 மில்லியன் மக்கள் பாதிக்கப்படலாம்: நிபுணர்கள் எச்சரிக்கை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

உலக நாடுகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிவரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிரித்தானியாவில் 40 மில்லியன் மக்கள் இலக்காகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

லண்டன் இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் நீல் பெர்குசன் இது தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்தில், உலகளாவிய தொற்றுநோயின் பிடியில் உலகம் கொஞ்சம் கொஞ்சமாக சிக்கி வருகிறது என்றார்.

இந்த நிலை நீடிக்கும் என்றால், பிரித்தானிய சனத்தொகையில் 60 சதவிகிதம் பேர் மிகவும் லேசான அறிகுறிகளுடன் கொரோனா வியாதியால் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.

கொரோனா அறிகுறிகளுடன் நபர் ஒருவர் வாடகை டாக்ஸியில் மருத்துவமனை சென்றுள்ள தகவல் வெளியான நிலையிலேயே பேராசிரியர் நீல் பெர்குசன் பொதுமக்களை எச்சரித்துள்ளார்.

இதனிடையே கொரோனா அறிகுறிகள் தெரியவரும் பொதுமக்கள் எவரும் மருத்துவமனைகளை நாட வேண்டாம் எனவும் தொலைபேசி வாயிலாக 111 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டால் போதும் எனவும் பிரித்தானிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

பெப்ரவரி 13 நிலவரப்படி, மொத்தம் 2,521 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 2,512 பேருக்கு பாதிப்பு இல்லை எனவும் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

உலக அளவில் கொரோனா வியாதிக்கு இதுவரை 1,491 பேர் மரணமடைந்துள்ளனர். மொத்தம் 65,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதில், 10,608 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்