லண்டனில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை தமிழர்! இன்னொரு தமிழர் குற்றவாளி என தீர்ப்பு

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் இலங்கை தமிழர் மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு உயிரிழந்த வழக்கில் இன்னொரு தமிழர் அவருக்கு காயத்தை ஏற்படுத்தியதற்காக குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு லண்டனில் உள்ள Harrow பகுதியில் உள்ள கடைக்குள் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாலை 6.30 மணிக்கு சிவகுரு சபநாதன் (69) என்பவர் சென்றுள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் அங்கு நிமல் ரத்னசிங்கம் (45) என்ற இலங்கை தமிழரும் வந்துள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, அது பின்னர் மோதலாக மாறிய நிலையில் ரத்னசிங்கம், சபரிதானனின் கழுத்தில் வேகமாக கையை வைத்து கடைக்கு வெளியில் கீழே தள்ளியுள்ளார்.

கீழே விழுந்த சபநாதன் தலையில் அடிப்பட்டு சிறிது நேரம் சுயநினைவை இழந்ததாக கூறப்படுகிறது.

இதன்பின்னர் அருகிலிருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து உதவி செய்து எழுப்பியுள்ளனர். இதன்பிறகு வீட்டுக்கு சபநாதன் சென்றுவிட்டார்.

அடுத்தநாள் காலையில் அவரின் மகள் தந்தையை எழுப்ப முயன்றும் அவர் எழவில்லை.

முதலில் சபநாதன் தூங்குவதாக அவர் நினைத்துள்ளார். பின்னரும் அவர் எழாத நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் அங்கு சுயநினைவு திரும்பாமலேயே சபநாதன் ஆகஸ்ட் 24 2017ல் உயிரிழந்துள்ளார்.

அவரின் பிரேத பரிசோதனையில் மூளையில் காயம் காரணமாக ஏற்பட்ட இரத்த கசிவால் உயிர் பிரிந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிசிடிவி கமெராவை ஆய்வு செய்த பொலிசார் ரத்னசிங்கத்தை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் சபநாதன் உடலில் காயங்கள் ஏற்படுத்தி வழக்கில் ரத்னசிங்கம் குற்றவாளி என வெள்ளிக்கிழமை அன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால் அவர் கொலை குற்றவாளி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்னசிங்கத்துக்கான தண்டனை விபரம் மார்ச் மாதம் அறிவிக்கப்படவுள்ளதுடன் அதற்கான திகதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்