ஆங்கிலம் பேசத் தெரியாதா?... இனி பிரித்தானியாவில் வேலை கிடையாது: பிரெக்சிட் அதிரடிகளை துவக்கியது பிரித்தானியா!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரெக்சிட்டுக்கு பிந்தைய அதிரடிகளை துவக்கியுள்ள பிரித்தானியா, முதல் அடியை புலம்பெயர்வோருக்கு அளித்துள்ளது.

அதன்படி பிரித்தானியாவுக்கு வேலை தேடி வருவோருக்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட உள்ளன.

அதில் முதன்மையானது, இனி ஆங்கிலம் பேசத்தெரியாவிட்டால் பிரித்தானியாவில் வேலை கிடையாது என்பது தான்.

ஆக, படிப்பை அடிப்படையாகக் கொண்ட வேலை தெரியாதவர்கள், அதாவது ஹொட்டல்களில் வேலை செய்வோர், இறைச்சிக் கடைகளில் வேலை செய்வோர் முதலானவர்கள் பிரித்தானியாவில் சென்று பிழைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தை இனி மறந்துவிட வேண்டியதுதான்.

தேர்தல் வாக்குறுதிகளில் கூறியதுபோலவே, அவுஸ்திரேலியாவைப் போலவே புள்ளிகள் அடிப்படையிலான புலம்பெயர்தல் அமைப்பு பிரித்தானியாவிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின்படி, பிரித்தானியாவுக்கு வேலை செய்ய வரும் வெளிநாட்டவர்களுக்கு ஆங்கிலம் பேசத் தெரிவதோடு, அவருக்கு திறன் பணி ஒன்றை செய்வதற்கு யாராவது ஒருவர் ஸ்பான்சர் செய்யவேண்டும்.

இந்த விதிமுறைகளுக்கு உட்படுவோருக்கு 50 புள்ளிகள் கிடைக்கும். ஆனால், பிரித்தானியாவில் வேலைக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு 70 புள்ளிகள் வேண்டும்.

எனவே, Low-skilled workers என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் இனி பிரித்தானியாவுக்கு சென்று வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பிரித்தானியாவுக்குள் நுழைய முடியாது!

அதாவது ஒரு வகையில் அகதிகள், புலம்பெயர்ந்தோர் வயிற்றில் அடிக்கும் ஒரு திட்டம் இது எனலாம்.

இதற்கிடையில், எதிர்க்கட்சியினர் உருப்படியாக சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். இந்த விதிமுறைகள் குறிப்பாக நர்ஸிங், உணவகத் தொழில், பேக்கரி, இறைச்சி வெட்டுதல், சீஸ் தயாரிப்போர், பாஸ்தா தயாரிப்போர் என பலதரப்பட்ட தொழில்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற குரல் எழுந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்