அம்மாவை சந்தோஷமாக வைத்திருப்பதற்கு நன்றி: தாயின் புதுக்காதலனுக்கு பிள்ளைகள் எழுதிய கடிதம்?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில், தங்கள் தாயை சந்தோஷமாக வைத்திருப்பதற்காக நன்றி என பிள்ளைகள் தங்கள் தாயின் காதலனுக்கு கடிதம் எழுதியதாக ஒரு வழக்கில் தெரிவிக்கப்பட்ட விடயம் நீதிபதிக்கே எரிச்சலையூட்டியது.

பிரித்தானியாவில் சிறை ஒன்றில் கல்வி பயிற்றுவிக்கும் வேலைக்காக சென்ற தன் மனைவி Melissa Frost (36), யாரோ ஒரு சிறை அதிகாரியுடன் தொடர்பிலிருப்பதாக அவரது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, வீடு முழுவதையும் சோதனையிட்டுள்ளார் அவர்.

வீட்டில் ஒரு சிம் கார்டு கிடைக்க, அதிலிருந்து, சிறையிலுள்ள கைதி ஒருவருடன் Melissaவுக்கு தவறான தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார் அவர்.

அதிலிருந்து, அந்த கைதியுடன் Melissa எல்லை மீறியிருப்பதையும், அந்த கைதி சிறையிலிருந்து வந்ததும், இருவரும் பாலுறவு கொள்ள திட்டமிட்டிருப்பதும் தெரியவரவே, உடனே அந்த சிம் கார்டை சிறைத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார் Melissaவின் கணவர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, இத்தகைய குற்றங்கள் சிறை அமைப்பின் முதுகெலும்பையே அசைப்பதாக உள்ளன.

இத்தகைய குற்றங்கள், பின்னர் மிரட்டுதல், சட்ட விரோதமாக சிறைக்குள் பொருட்களைக் கொண்டுவருதல் முதலான குற்றங்களுக்கு வழிவகுக்கும்.

இந்த வழக்கைக் கேட்டால் யாருக்கும் உங்கள் மீது பரிதாபம்தான் ஏற்படும், ஆனால் சிறைத்துறையில் பணியாற்றும் யாராக இருந்தாலும், இத்தகைய குற்றங்கள் புரிந்தால், உடனடியாக சிறைத்தண்டனை பெறவேண்டியிருக்கும் என்ற தெளிவான செய்தியை இந்த நீதிமன்றம் கொடுத்தாக வேண்டும் என்று கூறினார் நீதிபதி.

குழந்தைகள், தங்கள் தந்தை இருக்கும்போதே, தங்கள் தாயை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்காக ஒரு குற்றவாளிக்கு நன்றி சொல்வதெல்லாம் டூ மச் என்கிற தோரணையின் தன் எரிச்சலையும் வெளிப்படுத்தினார் நீதிபதி.

தன் குற்றங்களை ஒப்புக்கொண்ட Melissaவுக்கு நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பளித்தார் நீதிபதி. Melissaவின் ஆசிரியை வேலை பறிபோனதோடு, அவரது கணவரும் அவரை பிரிந்துவிட்டார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்