மரண தண்டனைக்கு பயந்து லண்டனுக்கு குடிபெயர்ந்த பெண் ஒரினச்சேர்க்கை தம்பதி!

Report Print Santhan in பிரித்தானியா
1156Shares

சவுதி அரேபியாவில் மரண தண்டனைக்கு பயந்து லண்டனுக்கு குடிபெயர்ந்த பெண் ஓரினச்சேர்க்கை தம்பதி, தங்கள் காதல் குறித்து தொலைக்காட்சி ஒன்றில் பேசியுள்ளனர்.

இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கு கடுமையான சட்டங்கள் விதிக்கப்படும். தற்போது வரை சில நாடுகளில் அவர்கள் அணியும் உடை, ஆண்கள் துணை இல்லாமல் வெளியே சென்றால், திருமணத்திற்கு முன் உறவு வைத்து கொண்டால் போன்றவற்றிற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.

இதன் உச்சமாக மரண தண்டனை கூட கொடுக்கப்படலாம்.

இதனால் Fad மற்றும் Nanz என்ற பெண் ஓரினச்சேர்க்கையாளர் தம்பதி, தீவிர பழமைவாத இராஜ்ஜியத்தை கொண்டுள்ள சவுதி அரேபியாவை விட்டு கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியேறினார்.

(Image: CEN/@7201fn)

ஏனெனில் இவர்களின் உறவு காரணமாக சிறையில் அடைக்கப்படலாம், அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக வெளியேறிய இவர்கள், தற்போது லண்டனில் குடிபெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இவர்கள் அரேபிய தொலைக்காட்சி ஒன்றில் தங்கள் இருவரும் எங்கு முதன் முதலில் சந்தித்துக் கொண்டோம், அதன் பின் எப்படி காதல் உருவானது என்று கூறியுள்ளனர்.

அவர்கள், சவுதிஅரேபியாவில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்க கூடும் என்பதால் இந்த முடிவு எடுத்தோம்.

(Image: CEN/@7201fn)

என்னுடைய ஆரம்பகால இளம் வயதிலே என்னுடைய பாலுனர்வை அறிந்தேன், இதை குடும்பத்தினரிடமிருந்து Nanz ரகசியமாக வைத்துள்ளார். அப்போது தான் ஸ்னாப் சாட் மூலம் இருவரும் அறிமுகமாகியதாக தெரிவித்துள்ளனர்.

அதன் பின் அங்கிருந்து வெளியேறி பிரித்தானியாவின் லண்டனுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருக்கின்றனர் என்பதை அறிந்தவுடன் குடும்பத்தினர் இவர்களை ஏற்று கொள்ளவில்லை. அதன் காரணமாகவே இவர்களுக்கு இங்கு புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.

(Image: CEN/@7201fn)

ஓரினச்சேர்க்கைக்கு மரண தண்டனை விதிக்கும் ஒன்பது நாடுகளில்(ஆப்கானிஸ்தான், புருனே, ஈரான், ஈராக், மவுரித்தேனியா, பாகிஸ்தான், சூடான் மற்றும் ஏமன்) சவுதி அரேபியாவும் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்