சுகாதார அலுவலர்கள் கண்ணில் பட்ட காட்சி... இந்திய உணவகம் மூடல்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவிலிருக்கும் இந்திய உணவகம் ஒன்றை ஆய்வு செய்ய வந்த சுகாதார அலுவலர்களின் கண்ணில் பட்ட ஒரு காட்சியால் உணவகம் மூடப்பட்டது.

பிரித்தானிய கரப்பான் பூச்சிகள் ஒழிக்க முடியாத பிரச்சினையாக உருவெடுத்து வருவதை பெரும்பாலானோர் அறிவர்.

அப்படியிருக்கும் நிலையில், கென்டிலிருக்கும் இந்திய உணவகம் ஒன்றை ஆய்வு செய்ய சுகாதார அலுவலர்கள் வந்துள்ளனர்.

அப்போது, சரியாக அங்கிருந்த மேலாளரின் கழுத்துப்பட்டையில் (Tie) ஒரு கரப்பான் பூச்சி ஏறியுள்ளது.

அதைக்கண்ட சுகாதார அலுவலர்கள் உடனே உணவகத்தை மூட உத்தரவிட்டுள்ளனர். அத்துடன் உணவகத்திற்கு 1,300 பவுண்டுகள் அபராதமும் விதிக்கப்பட்டது.

மீண்டும் சுகாதாரத்துறை அலுவலர்கள் வந்து ஆய்வு செய்து, உணவகம் சுகாதாரமாக உள்ளது என்று சான்றளித்த பின்னரே மீண்டும் உணவகம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...