அக்கா கணவர் மீதான ஆசையால் அக்காவுக்கே சூனியம் வைத்த தங்கை: அடுத்து செய்த துணிகரச் செயல்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தனது சொந்த அக்காவின் கணவர் மீது கொண்ட ஆசையால், எப்படியாவது அக்காவை ஒழித்துக்கட்டிவிட்டு, அக்கா கணவரை அடைய விரும்பியிருக்கிறார் ஒரு பிரித்தானிய இளம்பெண்.

Lutonஇல் வாழும் ஒரு குடும்பத்தில், சபா கான் (27) என்ற இளம்பெண், தனது அக்காவை திருடன் ஒருவன் கொன்றுவிட்டதாக பொலிசாரை அழைத்திருக்கிறார். பொலிசார் வந்து பார்க்கும்போது, சபாவின் அக்கா சைமா இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்திருக்கிறார்.

வீட்டின் பின் பக்கக் கதவின் கண்ணாடி உடைந்திருக்க, ஆடைகள் குலைந்து, நகைகள் சிதறிக் கிடக்க, பொலிசாரும் கொள்ளையடிக்க வந்த ஒருவர் சைமாவை கொலை செய்துவிட்ட கோணத்திலேயே விசாரித்துள்ளன.

அப்போது சபாவின் கையில் காயம் இருப்பதைக் கண்டு விசாரிக்க, தான் அக்காவைக் காப்பாற்றும் முயற்சியில் கண்ணாடி குத்திவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.

பின்னர் வீட்டில் நடத்திய சோதனையில், சபாவின் படுக்கையறையில் சைமாவைக் கொலை செய்த கத்தி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

மறுபக்கம், சபா கொடுத்த வாக்குமூலத்தை ஆராய்ந்த தடயவியல் நிபுணர்களுக்கு, அவர் உண்மையாகவே அக்கா இறந்த வருத்தத்துடன் பேசவில்லை என்பது தெரியவர, சந்தேகம் சபாவின் பக்கம் திரும்பியிருக்கிறது. அதற்குப்பிறகுதான் உண்மை வெளிவந்திருக்கிறது.

சபாவின் அக்கா சைமாவுக்கு திருமணமாகும்போது சபாவுக்கு வயது 10. அக்கா கணவர் மீது சபாவுக்கு ஈர்ப்பு ஏற்பட, அதைப் பயன்படுத்திக்கொண்டு சபாவும், அவரது அக்கா கணவர் ஹபீஸ் ரஹ்மானும் தவறான உறவில் ஈடுபட்டுள்ளார்கள்.

தற்போது சபாவுக்கு 27 வயதாகும் நிலையில், அக்காவின் கணவர் ரஹ்மான் தனக்கு மட்டுமே வேண்டும் என திட்டம் போட்டிருக்கிறார் சபா.

ஆகவே, அக்காவை ஒழித்துக்கட்டுவதற்காக என்னென்னவோ முயற்சி செய்திருக்கிறார். விஷம் வாங்கியிருக்கிறார், விஷப் பாம்புகளை வாங்க திட்டமிட்டிருக்கிறார், மந்திரவாதி ஒருவருக்கு 5,000 டொலர்கள் கொடுத்து அக்காவுக்கு சூனியம் வைத்து அவரைக் கொல்லச் சொல்லியிருக்கிறார்.

எதுவும் வெற்றிபெறாததால், கடைசியாக கத்தி ஒன்றை வாங்கி வந்து, அலுவலகம் சென்றிருந்த அக்காவிடம் குழந்தைகள் அழுவதாக பொய் சொல்லி வீட்டுக்கு வரவழைத்திருக்கிறார்.

வீட்டுக்கு வந்த சைமாவின் கையை வெட்டி, 68 முறை கத்தியால் குத்தி, கழுத்தை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார் சபா.

உண்மை வெளியானதையடுத்து, சபாவுக்கு, குறைந்தபட்சம் 22 ஆண்டுகள் சிறையில் செலவிடும் வகையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்