ஹரி-மேகன் வாங்கபோகும் புதிய மாளிகை இதுவா? அதன் மதிப்பு எத்தனை மில்லியன் தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

ஹரி மற்றும் மேகன் அமெரிக்காவில் குளம், டென்னிஸ் கோர்ட் என்று பிரம்மாண்ட அமைப்புடன் இருக்கும் மாளிகை ஒன்றை வாங்க நினைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரச குடும்பத்தில் இருந்து விலகி தற்போது கனடாவில் இருக்கும் ஹரி மற்றும் மேகன், ராயல் என்ற அடையாள வார்த்தையை உபயோகிக்க கூடாது என்று அதிரடியாக கூறப்பட்டது.

இதையடுத்து, வரும் மார்ச் 31-ஆம் திகதி இந்த தம்பதி, அனைத்து உத்தியோகபூர்வ அரச கடமைகளில் இருந்து விலகிய பின், அமெரிக்காவில் இருக்கும் பெரிய மாளிகை ஒன்றை வாங்க நினைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தம்பதியினர் அரச குடும்பத்தில் இருந்து விலகிய பின் இங்கிலாந்து மற்றும் கனடா இடையே தங்கள் நேரத்தை பிரிப்பதாக கூறியிருந்தனர். ஆனால் தற்போது இவர்கள் கலிபோர்னியாவிற்கு இடம் பெயர ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இவர்கள் மலிபுவில் இருக்கும் (Malibu mansion ) மாளிகையை வாங்க நினைக்கின்றனர். அந்த மாளிகை ஐந்து படுக்கை அறை, நீச்சம் குளம், டென்னிஸ் விளையாட்டு மைதானம் மற்றும் சிறிய அளவில் மைதானம் போன்று பரந்த அளவில் காணப்படும்.

இது பேவாட்ச் நட்சத்திரம் David Charvet மற்றும் அவரது மனைவி Brooke Burke ஆகியோருக்கு சொந்தமானது,

இந்நிலையில் கடந்த மாதம் Loose Women என்ற நிகழ்ச்சியில் Caitlyn Jenner(American television personality) என்பவர் ஹரி மற்றும் மேகன் மலிபுவில் வீடு ஒன்றை தேடுவதை கேள்விபட்டதாக கூறியுள்ளார்.

மேலும் ஹரி-மேகன் Malibu mansion-ஐ 7 மில்லியன் டொலர், அதாவது 5.4 மில்லியன் பவுண்ட்டிற்கு வாங்க நினைப்பதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அதுமட்டுமின்றி கலிபோர்னியாவிற்கு குடி பெயர முடிவு செய்துள்ள இவர்கள்,குறிப்பிட்ட இடத்தை வாங்கினால் அங்கிருந்து மேகனின் தாய் வீடு அருகில் இருப்பதால், அவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்பதன் காரணமாகவே இந்த முடிவு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...