தன்னுடைய ஏழு குழந்தைகளின் கண் முன்னால் திருமணம் செய்து கொண்ட தாய்! மனதை கலங்கடிக்கும் பின்னணி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் சில மாதங்களில் உயிரிழக்க போகும் நபரை ஏழு குழந்தைகளின் தாய், அவர்களின் முன்னாலேயே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Wirral-ஐ சேர்ந்தவர் Alan Birch.இவரும் Debbie McDonough என்ற பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கடந்த 12 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தார்.

இவர்களுக்கு ஏழு பிள்ளைகள் உள்ளனர், இதில் நான்கு பேர் பத்து வயதுக்குட்பட்ட சிறார்கள் ஆவார்கள்.

இந்நிலையில் ஒரு வருடத்துக்கு முன்னர் Alan வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் அவரின் நோய் குணமாகவில்லை.

Joe Hague Photography

முக்கியமாக Alan-ன் நாக்கு 90 சதவீதம் அகற்றப்பட்டது, அவர் கால்களின் தோல்களை எடுத்து நாக்கு பகுதியில் வைத்து தைத்து பேசுவதற்காக செயற்கையான நாக்கை மருத்துவர்கள் ஒட்டவைத்தனர்.

இந்த சூழலில் நோய் முற்றியதால் சில மாதங்களில் Alan உயிரிழந்துவிடுவார் என மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து Debbie, Alan-ஐ திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்.

அதன்படி ஏழு பிள்ளைகளின் முன்னிலையில் Debbie - Alan திருமணம் நடைபெற்றது. அப்போது மணப்பெண் Debbie கண்ணீர் விட்டு அழுதது காண்போர் மனதை உருக்கியது.

Joe Hague Photography

இது குறித்து Debbie கூறுகையில், எப்போது நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வீர்கள் என என்னுடய குழந்தைகள் அடிக்கடி கேட்பார்கள்.

ஆனால் அதற்கான சூழல் இப்படியொரு சோகமான நேரத்தில் வரும் என நான் எதிர்பார்க்கவில்லை.

என் கணவருக்கு மது அருந்தும் பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்க அறவே கிடையாது. இருந்த போதிலும் அவரை வாய் புற்றுநோய் தாக்கியது என வேதனையுடன் கூறியுள்ளார்.

Joe Hague Photography

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்