ராயல் என்ற பெயர் மகாராணியாருக்கு மட்டும் சொந்தமில்லை: இளவரசர் ஹரி மனைவி மேகன் அதிரடி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ராயல் என்ற பெயரை ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறும் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் பயன்படுத்தக்கூடாது என்ற விடயம் பிரித்தானியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீண்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மேகன்.

ஹரியும் மேகனும் வெளியிட்டுள்ள அந்த அசாதாரண அறிக்கையில், உலகம் முழுவதிலும் ராயல் என்ற பெயர் பிரித்தானிய மகாராணியாருக்கு மட்டுமே சொந்தமில்லை என்று கூறியுள்ளனர்.

ராயல் என்ற வார்த்தை பிரித்தானிய அரசாங்கத்துக்கோ அல்லது பிரித்தானிய மகாராணியாருக்கோ மட்டும் சொந்தமானதல்ல என்று கூறுகிறது அந்த அறிக்கை.

அதாவது அதன் பொருள் என்னவென்றால், பிரித்தானியாவில் வேண்டுமானால் ராயல் என்ற பெயரை பயன்படுத்துவதற்கு பிரித்தானிய மகாராணியார் தடை விதிக்கமுடியும், ஆனால் தாங்கள் உலகின் மற்ற நாடுகளுக்கு சென்றால் மகாராணியாரின் இந்த கட்டளை செல்லுபடியாகாது என்ற பொருளில் அவர்கள் இப்படி தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவை விட்டு வெளியே சென்றபின், வெளிநாடுகளில் ராயல் என்ற வார்த்தையை பயன்படுத்துவதை பிரித்தானிய மகாராணியாரோ, பிரித்தானிய அரசாங்கமோ சட்டப்படி கட்டுப்படுத்த உரிமையில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராயல் என பெயர் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, ஹரி மற்றும் அவரது மகன் உடலில் ஓடும் இரத்தம் ராஜ குடும்ப இரத்தம் என்னும் விடயத்தை யாரும் எடுத்துப்போட முடியாது என்று கூறியுள்ள மேகன், அவர்கள் எப்போதுமே ராஜ குடும்பத்தவர்கள்தான் என்றும் கூறியுள்ளார்.

ஹரி மேகன் தம்பதியருக்கு பாதுகாப்பளிப்பதற்காக 3 முதல் 6 மில்லியன் பவுண்டுகள் செலவாகும் என்னும் விடயமும், அதை கனடாவும் பிரித்தானியாவும் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறப்படும் விடயமும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தங்களையும் தங்கள் மகனையும் பாதுகாப்பது அவசியம் என்று கூறியுள்ளனர் ஹரி மேகன் தம்பதியர்.

மற்ற ராஜ குடும்ப உறுப்பினர்களை நடத்தும் விதத்தைவிட, அரண்மனை வட்டாரம் தங்களை நடத்துவதில் வித்தியாசம் காண்பிப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்