அன்பான பாட்டியுடன் இருந்த நல்ல உறவைக் கெடுத்துக்கொண்ட இளவரசர் ஹரி: புகைப்படங்கள் சொல்லும் கதை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
388Shares

பிரித்தானிய மகாராணியார் தனது செல்லப்பேரன் ஹரியுடன் எவ்வளவு அன்பாக இருந்தார் என்பதைக் காட்டும் படங்கள் வெளியாகி, அப்படி இருந்த உறவை ஹரி கெடுத்துக்கொண்டாரே என வருந்த வைக்கின்றன.

ஒரு புகைப்படத்தில், மகாராணியாருக்கு மரியாதை செலுத்தும் அணிவகுப்பில் ஒருவரைப் பார்த்து செல்லமான கிண்டலுடன் சிரிக்கிறார் மகாராணியார்.

உற்றுப்பார்த்தால்தான் தெரிகிறது, நமுட்டுச் சிரிப்புடன் அங்கு நிற்கும் வீரர் வேறு யாருமில்லை, அவரது செல்லப்பேரன் ஹரியேதான்.

அடுத்து ஒரு புகைப்படம், அதில் தேவாலயத்திலிருந்து திரும்பும் வழியில் ஹரி ஏதோ சொல்லி அசட்டு சிரிப்பு சிரிக்க, மகாராணியார் அவரைப் பார்த்து சிரிக்கும் சிரிப்பில் பாசம் பொங்கி வழிவதை யார் வேண்டுமானாலும் வெளிப்படையாக காணமுடியும்.

மற்றொரு புகைப்படம், அதில், இளவரசர் சார்லஸ் இருக்கிறார், வில்லியம் இருக்கிறார், இளவரசி மார்கரட் கூட இருக்கிறார்.

என்றாலும். மகாராணியார் தனது செல்லப்பேரன் ஹரியிடம்தான் பேசிகொண்டிருக்கிறார். அப்புறம் ஒரு வீடியோ, அதில் மகாராணியாரின் பேரன் வளர்ந்துவிட்டார். முகத்தில் தாடியும் வளர்ந்துவிட்டது.

ஆனாலும், பாட்டியும் பேரனும் பேசிக்கொள்ளும்போது குறும்பு கொப்புளிப்பதை பார்க்கமுடிகிறது.

சொல்லப்போனால், மகாராணியாருடன் அவரது கணவர் தவிர்த்து மற்றொரு ஆண் இருக்கிறார் என்றால், அது பெரும்பாலும் ஹரியாகத்தான் இருந்திருக்கிறது என்பதை பல சந்தர்ப்பங்கள் உரக்கச் சொல்வதை மறுக்கமுடியாது.

அப்படியிருந்த பாட்டி பேரன் உறவை, ஹரி கெடுத்துக்கொண்டாரே என்ற ஆதங்கம் பல இடங்களில் ஒலிப்பதை உணரமுடிகிறது.

ஹரி மாறியிருக்கலாம், பாட்டியை விட்டு புதிதாக வந்த காதல் மனைவி மேகனுடன் போனதால் எல்லாவற்றையும் மறந்து போயிருக்கலாம்.

ஆனால், கமெராக்கள் பொய் சொல்வதில்லை, தனது பேரன் ஹரி பிறந்த மகிழ்ச்சியை அவர் அறிவித்தபோது மகாராணியாருக்கு இருந்த அதே ஆர்வம் இன்னமும் அவர் மீது அவருக்கு இருப்பதை அவை உரத்த குரலில் காலமெல்லாம் சொல்லிக்கொண்டேயிருக்கத்தான் செய்யும்.

ஆனால், கனடாவின் வான்கூவர் தீவிலிருந்து தொடர்ந்து மகாராணியாரை அவமதிக்கும் வண்ணம் அறிக்கைகள் வந்துகொண்டே இருந்தாலும் இதே நிலை நீடிக்குமா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்