தனது முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ள ஒரு தாயார், 21 வயதில் பிரித்தானியாவின் இளவயது பாட்டி என்று கருதப்படுகிறார்.
பிரித்தானியாவின் கிரேவ்ஸென்ட், கென்ட் பகுதியை சேர்ந்த 56 வயது மார்க் மற்றும் 21 வயது பெக்கா கீலி என்பவர்களே அந்த தம்பதி.
பெக்காவுக்கு 16 வயது இருக்கும்போது ஒரு இசை நிகழ்ச்சியில் பாடகர் மர்க்கை சந்தித்துள்ளார்.
மார்க்கின் முந்தைய திருமணத்தில் அவரது மூத்த குழந்தையை விட பெக்கா ஆறு வயது இளையவள் எனவும், மார்க்கின் இன்னொரு பிள்ளையின் அதே வயது பெக்காவுக்கு.
மார்க்குடனான நட்பு நாளடைவில் காதலாக மாறவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
ஆனால் சம வயது நபரை தேடிக் கொள்ள பலமுறை மார்க் பெக்காவுக்கு அறிவுரை கூறியதாகவும் அந்த அறிவுரைகளை அவர் செவிமடுக்கவில்லை என்றே பெக்கா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் மார்க் மற்றும் பெக்கா தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்தது.
56 வயது நபரை திருமணம் செய்து கொண்டதால் பலரும் பெக்காவை பாட்டி என்றே அழைப்பதாகவும், ஆனால் அதுகுறித்து தாம் கவலைப்படவில்லை எனவும் பெக்கா தெரிவித்துள்ளார்.
இந்த உறவு தவறான முன்னுதாரணம் என நிறைய பேர் நினைத்தார்கள். பெக்காவின் சம வயதினரைக் கண்டுபிடிக்க நான் அவளிடம் பலமுறை சொன்னேன்,

ஆனால் நாங்கள் ஒருவருக்கொருவர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை உணர்ந்தோம், அந்த மகிழ்ச்சியை தொலைத்து விடாமல் இருக்க முடிவு செய்தோம் என்கிறார் மார்க்.
மார்க்கின் முந்தைய திருமணத்தில் ஆரோன்(27), ஜேக்(21), லூக்கா(16), மற்றும் எம்மா(13) என நான்கு பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.