பிரித்தானியாவில் ரயில் மீது ஏறிய நபருக்கு நேர்ந்த கதி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இன்று காலை, பிரித்தானியா ரயில் நிலையம் ஒன்றில் ரயில் மீது திடீரென ஏறிய ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

Norwich ரயில் நிலையத்தில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.

ரயில் மீது ஏறிய அந்த நபர் மின் கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து Norwich ரயில் நிலையம் மூடப்பட்டது.

அவசர உதவிக்குழுவினர் விரைந்து வந்த நிலையிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

ஒருவர் ரயில் மீது செல்லும் மின் கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததை பிரித்தானிய போக்குவரத்து பொலிசாரும் உறுதிசெய்துள்ளனர்.

உயிரிழந்தவர் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சில இடங்களுக்கு மட்டும் ரயில் சேவை தொடங்கியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்