லண்டனில் கொரோனா பயத்தில் மூடப்பட்ட நிறுவனம்! வீட்டுக்கு அனுப்பப்பட்ட 300 ஊழியர்கள்.. ஒரு ஊழியரால் ஏற்பட்ட பீதி

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் உள்ள ஒரு அலுவலகத்தில் ஊழியர் ஒருவரால் கொரோனா பீதி ஏற்பட்ட நிலையில் அந்த அலுவலகம் உடனடியாக மூடப்பட்டு அங்கு பணிபுரியும் 300 ஊழியர்களும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

கொரோனா வைரஸ் உலகையே பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் லண்டனின் Canary Wharf பகுதியில் செயல்பட்டு அமெரிக்க எண்ணெய் நிறுவனமான Chevronல் பணிபுரியும் ஊழியருக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது.

கொரோனா பாதிப்பு உள்ள நாட்டிலிருந்து அந்த ஊழியர் லண்டனுக்கு சமீபத்தில் திரும்பியது தெரியவந்தது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டு அங்கு பணிபுரியும் 300 ஊழியர்களும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பான பரிசோதனை முடிவுகள் வெளிவரும் வரை அவர் வீட்டிலிருந்து பணிபுரிய அலுவலகத்தின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், அபாயத்தை குறைக்கவே முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மற்றும் உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதலைப் பின்பற்றி நிலைமையை மிக நெருக்கமாக கண்காணிப்போம் என கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படலாம் என்ற அனுமானத்தை அமைச்சர்கள் இப்போது பரிசீலித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்