பிரித்தானியா பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்த கருப்பு நிற பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை!

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் பெண் ஒருவர் தன்னுடைய பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு, அரசு இணையதளத்தில் தன்னுடைய புகைப்படத்தை பதிவிட்டிருந்த நிலையில், அது நிராகரிக்கப்பட்ட காரணம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறிய பின்பு பிரித்தானியாவில் பல்வேறு விதிமுறைகள் கொண்டு வரப்படுகிறன்றன.

குறிப்பாக பாஸ்போர்ட் விவகாரத்தில் அரசு சில முடிவுகளை எடுத்துள்ளது. பாஸ்போர்ட் அடுத்த மாதம் நீல நிறத்தில் வழங்கப்படும்.

இந்நிலையில் Elaine Babey என்ற கருப்பு நிற பெண் ஒருவர் தன்னுடைய பாஸ்போர்ட்டை புதுப்பிதற்காக gov.uk இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். அப்போது புகைப்படம் கேட்ட போது, தன்னுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை பதிவிட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அவரின் புகைப்படத்தை (Automatic Digital System) ஸ்கேன் செய்த போது, உங்களின் புகைப்படம் விதிமுறைகளை பின்பற்றவில்லை, இதனால் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு ஒத்துபோகாது என்று குறிப்பிட்டுள்ளது.

இதனால் அவர் என்ன காரணம் என்று பார்த்த போது, அதில், உங்களுடைய வாய் திறந்த நிலையில் இருக்கிறது, அதனால் வேறு எதாவது புகைப்படம் இருந்தால் பதிவிடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால் அந்த புகைப்படத்தில் அவர் சரியாக இருக்கிறார். வாய் மூடிய நிலையிலே உள்ளது. இதை Elaine Babey தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்