கொரோனா எச்சரிக்கை! லண்டன் ஷாப்பிங் மாலில் நிலைகுலைந்து கீழே விழுந்த நபரின் வீடியோ வெளியானது

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் இருக்கும் ஷாப்பிங் சென்டர் ஒன்றில் திடீரென்று ஒரு பயங்கர சத்ததுடன் இருமியது மட்டுமின்றி, நிலை தடுமாறி கீழே விழுந்ததால், இது கொரோனாவாக இருக்கலாம் என்ற அச்சம் நிலவியுள்ளது.

சீனாவில் 2000-க்கும் மேற்பட்ட மக்களின் உயிரை வாங்கிய கொரோனா வைரஸ் தற்போது வரை சீனாவை மிரட்டி வருகிறது. இதை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.

சீனாவில் மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் இந்த நோயின் தாக்கம் இருப்பதால், உன்னிப்பாக இது கவனிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக பிரித்தானியாவிலும் கொரோனா வைரஸ் நுழைந்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என்.ஹெச்.எஸ்-ன் பார்வையில் தனியாக வைக்கப்பட்டு கவனிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் லண்டனின் Canary Wharf-ல் இருக்கும் Jubilee Place ஷாப்பிங் சென்டரில் கருப்பு நிற ஜாக்கெட் அணிந்திருந்த நபர் ஒருவர் திடீரென்று பலமான இருமல் சத்ததுடன் நடக்க முயன்றார். அப்போது அவர் நடக்க முடியாமல் அங்கு கீழே தவழ்ந்து விழுந்தார்.

தொடர்ந்து இருமிய படியே இருந்தார். ஏற்கனவே குறித்த பகுதியில் அமெரிக்க எண்ணெய் நிறுவனமான Chevronல் பணிபுரியும் ஊழியருக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டு அங்கு பணிபுரியும் 300 ஊழியர்களும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். தற்போது அதே பகுதியில் இந்த நபர் இப்படி விழுந்ததால், கொரோனா வைரஸாக இருக்குமோ என்ற பீதி நிலவியுள்ளது.

இதை அங்கிருக்கும் நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

(Image: Daily Star Online)

மேலும் இந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறுகையில், நான் அங்கிருந்த Caffe Nero-வில் உட்கார்ந்திருந்தேன், அப்போது திடீரென்று பலமான இருமல் சத்ததுடன் ஒரு நபர் நடந்தார். அவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததைக் கண்ட, அங்கிருந்த மக்கள் சிலர் அவர் அருகில் செல்லாமல் ஓடினர்.

இந்த சம்பவம் சரியாக கடந்த திங்கட் கிழமை உள்ளூர் நேரப்படி 6.20 மணிக்கு நடந்ததாக கூறியுள்ளார்.

லண்டன் ஆம்புலன்ஸ் ஊழியர் கூறுகையில், எங்களுக்கு சரியாக 5.55 மணிக்கு கடந்த 24-ஆம் திகதி ஒரு போன் வந்தது. அதில் நபர் ஒருவர் மிகவும் மோசமான நிலையில் Canary Wharf-ல் இருக்கும் ஷாப்பிங் செண்டரில் இருப்பதாக கூறப்பட்டது.

இதனால் நாங்கள் உடனடியாக ஆம்புலன்சை தயார் செய்து அனுப்பிய போது, அதன் பின் மீண்டும் ஒரு போன் வந்தது. அதில் ஆம்புலன்ஸ் தேவையில்லை என்று கூறப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் Canary Wharf செய்தி தொடர்பாளர், Canary Wharf-ல் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதற்கான எந்த ஒரு உறுதியான தகவலும் இல்லை, யாருக்கும் இன்னும் இது உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

முடிந்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...