ரயில் நிலையத்தில் பாடிய இரண்டு வரி பாடலால் புகழ் பெற்ற பிரித்தானிய பெண்: தொடரும் பாராட்டுகளும் பரிசுகளும்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ரயில் நிலையத்தில் பாடிய இரண்டு வரி பாடல் ஒன்று ஒரு இளம் பாடகியை பிரபலம் அடையச் செய்துள்ளது.

வழியில் வருபவர்களையெல்லாம் வழி மறித்து ஒரு பாடலின் சில வரிகளை பாடி, அந்த பாடல் வரிகளை பாடி முடிக்க சொல்லி வேடிக்கை செய்வது Kevin Freshwater என்பவரது வழக்கம்.

வழக்கம்போல லண்டன் சுரங்க ரயில் நிலையத்தில் நின்றிருந்த Kevin, அவ்வழியே வந்தவர்களிடம் ஒரு பாடலின் முதல் வரியைப் பாடி, அதை முடிக்கச் சொல்லியிருக்கிறார்.

அப்போது அங்கு கிழக்கு லண்டனின் Romfordஐச் சேர்ந்த Charlotte Awbery வந்திருக்கிறார்.

அவரிடம் Kevin, A Star is Born என்ற பிரபல படத்திலிருந்து ஒரு பாடலின் முதல் வரியைப் பாடி, அந்த வரியை முடிக்கச் சொல்லியிருக்கிறார்.

சற்றும் யோசிக்காமல் Charlotte அந்த பாடலை சூப்பராக பாட, மெய்மறந்து போன Kevin, அந்த பாடலை சமூக ஊடகம் ஒன்றில் பதிவேற்ற, சட்டென வைரலாகியுள்ளது அந்த வீடியோ.

ஆறு மில்லியன்பேர் அந்த வீடியோவை பார்வையிட்டதோடு, அந்த பாடல் ஐடியூனில் டாப் 40 பாடல்களில் இடம்பெறவும் அந்த வீடியோ உதவியுள்ளது.

பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்தும் Ellen, Charlotteஐ தன் நிகழ்ச்சிக்கு அழைத்து கௌரவித்ததோடு, 10,000 பவுண்டுகள் பரிசு, ஓராண்டு இலவச ரயில் டிக்கெட் என பரிசு மழையும் பொழிந்துவிட்டார். விரைவில் Charlotte ஹாலிவுட்டுக்கு போனாலும் ஆச்சரியமில்லை!

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்