20 நாடுகளுக்குள் புதிதாக புகுந்த கொரோனா வைரஸ்... பலர் பலி! வெளியான பட்டியல்

Report Print Santhan in பிரித்தானியா

சீனாவை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் கடந்த வாரத்தில் மட்டும் 20 நாடுகளுக்குள் புகுந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் மட்டும் தற்போது வரை 2744 பேர் உயிரிழந்துள்ளனர். அதைத் தவிர உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிர்ச்சி தரும் தகவலாக கடந்த வாரத்தில் மட்டும் 20 நாடுகளில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் எனில் ஈரான் மற்றும் இத்தாலியை கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது என்றே கூறலாம். ஏனெனில் இத்தாலியில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் 400 பேர் இருப்பதாகவும், அதை தவிர 12 பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஈரானில் 141 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை உறுதிபடுத்திய 20 நாடுகளின் பட்டியல்
 • Lebanon
 • Oman
 • Israel
 • Afghanistan
 • Greece
 • Denmark
 • Austria
 • Estonia
 • Romania
 • North Macedonia
 • Georgia
 • Pakistan
 • Norway
 • Spain
 • Brazil
 • Algeria
 • Switzerland
 • Croatia
 • Bahrain
 • Kuwait

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்