பிரித்தானியர்கள் 10-ல் ஒருவர் பாதிக்கப்படலாம்... களத்தில் ராணுவ மருத்துவர்கள்: போர்க்கால நடவடிக்கை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

ஐரோப்பிய நாடுகளில் அதி வேகமாக பரவிவரும் கொரோனா வியாதிக்கு பிரித்தானியாவில் பத்தில் ஒருவர் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக வெளியான எச்சரிக்கையை அடுத்து ராணுவ மருத்துவர்களை உதவிக்கு அழைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா வியாதியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20-ஐ தொட்டுள்ளது.

அந்த 20-வது நபருக்கு உள்ளூரில் இருந்தே நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் வெளியான நிலையில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை முன்னெடுக்க NHS அதிகாரிகள் முவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்காகும் மக்கள் என்ன செய்ய வேண்டும், எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட அவசர வழிகாட்டுதல்கள் அறிக்கை ஒன்றை அடுத்த வாரம் பிரசுரிக்க உள்ளனர்.

மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்க்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு பிரித்தானியாவின் செஞ்சிலுவை சங்கம், செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மற்றும் பிரித்தானிய ராணுவ மருத்துவர்கள் அவர்களுடன் நர்ஸ்கள் என சிறப்பு குழு ஒன்றை அமைக்க NHS அதிகாரிகள் முவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி, கொரோனாவால் இறக்க நேரிடும் நபர்களின் சடலத்தை எவ்வாறு அப்புறப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் திட்டமிட உள்ளனர்.

மேலும், கொரோனாவால் இறப்பு எண்ணிக்கை கட்டுப்பாடின்றி அதிகரித்தால் லண்டனின் ஹைட் பார்க்கை பிணவறையாக மாற்றப்படும் என்பதை லண்டன் மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் நகரங்களுக்கான கன்சர்வேடிவ் எம்.பி. Nickie Aiken உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே பிரித்தானியர்களின் 70 சதவிகித மக்கள் இந்த கொடிய கொரோனா வியாதிக்கு இலக்காவார்கள் எனவும்,

அதில் 15 சதவிகித மக்கள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என பிரித்தானிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...