கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியான முதல் பிரித்தானியரின் புகைப்படம் வெளியானது

Report Print Arbin Arbin in பிரித்தானியா

COVID-19 என்ற கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியான முதல் பிரித்தானியரின் புகைப்படம் முதன் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் பாலி தீவில் கணவருடன் விடுமுறையை கழிக்க சென்றவர் 52 வயதான கிம்பர்லி பின்லேசன்.

இந்த நிலையிலேயே இவர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திங்களன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிம்பர்லி பின்லேசன், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை மரணமடைந்துள்ளார்.

இவரது கணவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட நிலையிலும், மார்ச் 8 ஆம் திகதி முதல் அவர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

நான்கு பிள்ளைகளின் தாயாரான கிம்பர்லி பின்லேசன் பாலியில் விடுமுறைக்கு சென்ற போது பிள்ளைகளை பிரித்தானியாவில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.

இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான 25-வது நபர் கிம்பர்லி பின்லேசன் என அங்குள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

52 வயதான கிம்பர்லி பின்லேசன் நீரிழிவு மற்றும் சுவாசக் கோளாறு தொடர்பான பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்