கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: பிரித்தானியாவில் இருந்து இந்த நாட்டுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை

Report Print Arbin Arbin in பிரித்தானியா
890Shares

பிரித்தானியா, நார்வே, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இலங்கைக்கு புறப்படும் பயணிகளுக்கு தடை விதித்துள்ளதாக இலங்கை விமான போக்குவரத்துத்துறை தலைவர் அறிவித்துள்ளார்.

இலங்கை சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலை அடுத்து, பிரித்தானியா, நார்வே, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு புறப்படும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமான போக்குவரத்துத்துறை தலைவர் உபுல் தர்மதாசா தெரிவித்துள்ளார்.

இந்தத் தடை உத்தரவானது மார்ச் 16 ஆம் திகதி முதல் அடுத்த இரண்டு வார காலத்திற்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய காலகட்டத்தில் இலங்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட எந்தவொரு விமானத்திலும் அந்த நாடுகளில் 14 நாட்களுக்கு மேல் தங்கியிருந்த பயணிகளை அனுமதிக்கக் கூடாது என்று கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்