பிரித்தானியாவில் போதுமான செயற்கை சுவாச கருவிகள் இல்லை: உண்மையை ஒப்புக்கொண்ட சுகாதார செயலாளர்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

கொரோனா வைரஸின் தாக்குதலானது தீவிரமடைந்து வரும் நிலையில், பிரித்தானியாவில் போதுமான செயற்கை சுவாச கருவிகள் இல்லை என சுகாதார செயலாளர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்திற்கு மத்தியில், போதுமான செயற்கை சுவாச கருவிகள் தேசிய சுகாதார சேவை மையத்தில் (NHS) தற்போது இல்லை என்று சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனால் வயதானவர்களை நான்கு மாதங்கள் வரை வீட்டில் இருக்குமாறு அரசாங்கம் கூறும் என்று அவர் கூறியுள்ளார்.

70 வயதிற்கு மேற்பட்டவர்கள் நோயைப் பரப்புவதைத் தடுக்கும் முயற்சியில், அறிகுறிகள் இல்லாவிட்டாலும் சுயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரித்தானியாவில் இறப்பவர்களின் எண்ணிக்கை 35 ஐ எட்டியுள்ளதால் சமூகத்தில் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாக்கும் வேலையில் ஈடுபடும் என கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பல மடங்கு அதிக இயந்திரங்கள் தேவைப்படும் நிலையில், சுகாதார சேவையில் தற்போது 5,000 செயற்கை சுவாச கருவிகள் மட்டுமே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிகமானவற்றை உற்பத்தி செய்ய முடியாது எனக்கூறிய அவர், தயாரிக்கப்பட்ட அனைத்தையும் அரசாங்கம் வாங்கும் என்று உறுதியளித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்