70 வயதுக்கு மேற்பட்ட பிரித்தானியர்கள் அனைவரும் சில வாரங்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள்: சுகாதாரத்துறை செயலர்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஒன்றாக, 70 வயதுக்கு மேற்பட்ட பிரித்தானியர்கள் அனைவரும் வரும் வாரங்களில் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவராகள் என்று பிரித்தானியா அறிவித்துள்ளது.

70 வயதுக்கு மேற்பட்ட பிரித்தானியர்கள் அனைவரும் சில வாரங்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், வீடுகளுக்குள் அடைந்திருக்கவேண்டிய காலகட்டம், மிக நீண்டதாக இருக்கும் என்றும் பிரித்தானிய சுகாதாரத்துறை செயலரான Matt Hancock தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் கொரொனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிப்பதற்காக, ஹொட்டல்கள் மருத்துவமனைகளாக மாற்றப்படலாம் என்றும் தெரிவித்துள்ள Matt Hancock, படுக்கைகளின் எண்ணிக்கையை ஆயிரக்கணக்கில் அதிகரிப்பது தொடர்பாக, தனியார் மருத்துவமனைகளுடன் அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்